உலகம்

இப்ராஹிம் ரைசி உடலுக்கு வழங்கப்பட்ட அதே மரியாதையை, இஸ்மாயில் ஹனியாவிற்கும் வழங்கிய ஈரான்!

இஸ்மாயில் ஹனியாவின் வாழ்க்கையை பள்ளி வரலாற்று பாடமாக்கும் ஈரான்…
முன்னாள் அதிபர் ரைசியின் அந்தஸ்தை ஹமாஸ் தலைவருக்கு வழங்கிய ஈரான்…

ஈரான் மண்ணில் ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நிகழ்வு அந்நாட்டில் பெரும் அரசியல் பிரளயமாக வெடித்துள்ளது. இதற்கு கடும் பதிலடி கொடுக்கும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்மாயில் ஹனியாவின் இறுதித் தொழுகை நிகழ்ச்சியை, அந்நாட்டின் சுப்ரீம் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி, முன்னின்று நடத்தினார்.

இப்ராஹிம் ரைசியின் இறுதித் தொழுகையையும் சுப்ரீம் தலைவர் அலி காமெனி முன்னின்று நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஈரானின் முன்னாள் அதிபருக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தை, ஹமாஸ் தலைவருக்கும் ஈரான் வழங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து அல் ஜசீராவுக்கு பேட்டியளித்துள்ள ஈரான் பல்கலைக்கழகத்தின் உலக அரசியல் பிரிவு பேராசிரியர் ஃபோஅட் இசாடி (Foad Izadi ) கூறும் போது, இஸ்மாயில் ஹனியா ஈரான் மண்ணில் கொல்லப்பட்டது, நாட்டு மக்களை பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது, இதற்கு கடுமையான பதிலடியை ஈரான் கொடுக்கும், முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடலுக்கு என்ன மரியாதை வழங்கப்பட்டதோ, அதே அரசு மரியாதை இஸ்மாயில் ஹனியாவின் உடலுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இது வரலாற்று பாடப் புத்தகத்தில் இடம்பெறும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

வியாழக்கிழமை ஈரானில் நடைபெறும் இறுதித் தொழுகைக்கு பிறகு, இஸ்மாயில் ஹனியாவின் உடல், தெஹ்ரானின் சுதந்திர சதுக்கத்தில், பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது. பிறகு, அந்த உடல் கத்தார் தலைநகர் தோஹாவிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்குள்ள மிகப்பெரிய பள்ளிவாசலான Imam Muhammad bin Abdul Wahhab Mosque இல் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைக்கு பிறகு இறுதித் தொழுகை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து வடக்கு தோஹாவில் உள்ள லுசைல் மண்ணறையில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

isஇந்த மண்ணறையில் தான் கத்தார் நிறுவனர் உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் பலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த இறுதி நிகழ்ச்சிகளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியத் தலைவர்கள், அறிஞர்கள் ஆளுமைகள் கலந்து கொள்கின்றனர்.
=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button