பாகிஸ்தானை தட்டித்தூக்க இந்தியாவின் படை பலம் என்ன?

பாகிஸ்தானுக்குள் கால் வைக்காமலேயே பயங்கரவாதிகளை பந்தாடப்போகும் இந்தியா…
மிரள வைக்கும் ஆயுத பலம்…
பாகிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை, வான்வெளி, எல்லைக் கோடு ஆகியவற்றை மீறாமல் ராணுவ வீரர்களை எல்லாம் அனுப்பாமல் இந்தியா எவ்வாறு தாக்குதலை நடத்த முடியும் என பார்க்கலாம்…
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. வான்வெளியை மீறாமல் மற்றும் அதன் விமானிகளின் உயிரைப் பணயம் வைக்காமல், பாகிஸ்தானுக்குள் உள்ள ஆழமான பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா பதிலடி கொடுத்து குறிவைக்க முடியுமா? ஏவுகணைகள், பீரங்கிகள், ட்ரோன்கள் என பாகிஸ்தானுக்குள் கால் வைக்காமலேயே அந்த நாட்டை இறங்கி அடிக்க ஏராளமான படை பலம் நம்மிடம் இருக்கிறது.
இதில் முதலிடத்தில் இருப்பது பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை. ரஷ்யாவின் கூட்டு ஏவுகணை முயற்சியான பிரம்மோஸின் சக்தியை உலகம் ஏற்கனவே அறிந்திருக்கிறது. பிரம்மோஸ் ஏவுகணை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 290 முதல் 450 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது, இதை 600 கிலோ மீட்டர் வரையிலும் நீட்டிக்க முடியும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் சிந்து ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை குறிவைக்க இந்தியா இதைப் பயன்படுத்தலாம். அடுத்தது நிர்பாய் ஏவுகணை 800 கிலோ மீட்டர் முதல் 1,000 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இதனால் பாகிஸ்தானின் எந்த இடத்தையும் குறிவைத்து தாக்கி அழிக்கும் முடியும்.
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணைத் தொடர்களை வெற்றிகரமாக சோதித்துள்ளது. தூரம், வேகம் மற்றும் அழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அக்னி-5 ஏவுகணை ICBM அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அக்னி-5 ஏவுகணை 5500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி-5 ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு வேகமாக, அதாவது மேக் 24 வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் ஏதாவது செய்ய நினைக்கும் நேரத்தில், அக்னி-5 அதற்கு அழிவின் காட்சியைக் காட்டிவிடும்.
இந்திய ராணுவத்திடம் உள்ள அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பிரிடேட்டர்-B ட்ரோன்கள், 1,800 கிலோ மீட்டருக்கு மேல் செல்லக்கூடிய ஹெல்ஃபயர் ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு மரண பயத்தைக் கொடுத்துள்ளது. இந்திய இராணுவம் 49-90 கிமீ வரம்பைக் கொண்ட பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சருடன் கூடிய பீரங்கியை வைத்துள்ளது.
சைபர் தாக்குதலை நடத்தியும் இந்தியா பாகிஸ்தானை ஸ்தம்பிக்க வைக்க முடியும். பாகிஸ்தான் இராணுவ தொடர்பு வலையமைப்புகள், ரேடார் அமைப்புகள் அல்லது பயங்கரவாத கட்டளை கட்டமைப்புகள் மீது இந்தியா சைபர் தாக்குதல்களை நடத்தி அவற்றை பயனற்றதாக மாற்ற முடியும். இந்தியா மின்னணு போருக்குச் சென்று DRDOவின் சம்யுக்தா அமைப்பு அல்லது ரஃபேலின் SPECTRA சூட் போன்ற EW தளங்களைப் பயன்படுத்தி எல்லைக்கு அருகிலுள்ள பாகிஸ்தான் ரேடார் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளை முடக்கலாம். எனவே இந்தியாவிடம் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் நிபுணர்கள்.