எலான் மஸ்கை தோற்கடித்து, உலகப் பணக்காரர் ஆகும் முயற்சியில் களமிறங்கியுள்ள இந்திய இளைஞர்கள்!

இஸ்ரோவிற்கு நிகரான தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை உருவாக்கிய இளைஞர்கள். 12 லட்சம் கோடி சொத்து கொண்ட, எலான் மஸ்கை வீழ்த்த முயற்சி இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானிகளின் திட்டம் வெற்றி பெறுமா?
ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் நன்கு பயிற்சி பெற்ற பிறகு, அதே மாதிரியான வேறு நிறுவனத்தை தொடங்கி வெற்றி பெறுவது இயல்பு. இது சாதாரண தொழில்களுக்கு பொருந்தும்.
ஆனால் தற்போது, இந்தியாவின், விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் வேலை செய்த, விஞ்ஞானிகள் 2 பேர், இஸ்ரோவை போன்றே, ஒரு தனியார் விண்வெளி அமைப்பை உருவாக்கி, அதில் தொடர் வெற்றிகளையும் குவித்து வருகின்றனர் என்பது பலரும் அறியாத செய்தி.
ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள Skyroot Aerospace
நிறுவனம் இஸ்ரோ செய்து வரும் அனைத்து ஆராய்ச்சி பணிகளையும் செய்யும் தனியார் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இஸ்ரோவில் வேலை செய்த 33 வயதே ஆன விஞ்ஞானி பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோர் இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மதுரை தியாகராஜர் கல்லூரியில் படித்த இஸ்ரோ விஞ்ஞானி வாசுதேவன் ஞான காந்தி, இவர்களுக்கு உதவி வருகிறார்.
தற்போது, விக்ரம் என்ற பெயரில் சில பாகங்களை தவிர்த்து, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, செயற்கோள்களை தாங்கிய ராக்கெட்டுகளை ஸ்கைரூட் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
இதற்கு சில கட்டணங்களை பெற்றுக் கொண்டு இஸ்ரோவும் உதவியுள்ளது.
எலான் மஸ்க் இன்று உலகப் பணக்காரராக இருக்க அவரது ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் ஒரு காரணம் ஆகும்.
இந்நிலையில் இந்திய இளம் விஞ்ஞானிகளான பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பாரத் டாகா ஆகியோர் அதே பாதையில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இவர்களது நிறுவனத்துக்கு தற்போது வரை 95 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை முதலீடாக ஈர்த்துள்ளது.
2040ஆம் ஆண்டுக்குள் இந்த நிறுவனம் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாக ஈர்க்கும் என நம்பப்படுகிறது. அப்படி நடந்தால், எலான் மஸ்கின் இடத்திற்கு இந்திய இளம் விஞ்ஞானிகள் வர முடியும் என கூறப்படுகிறது.