பாகிஸ்தானை தும்சம் செய்ய தேதி குறித்த இந்தியா…!

அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலுக்கு வாய்ப்பு…
பாகிஸ்தான் முக்கிய அமைச்சர் பரபரப்பு அறிவிப்பு…
அடுத்த 24-36 மணி நேரத்தில் இந்தியா பாகிஸ்தான் மீது முழு இராணுவத் தாக்குதலை நடத்தும் என்று பாகிஸ்தானுக்கு நம்பகமான உளவுத்துறை தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலைத் தொடர்ந்து அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியா விரைவில் இராணுவ நடவடிக்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானின் உளவுத்துறை தெரிவித்ததாக அந்நாட்டின் தகவல் துறை அமைச்சர் அட்டாவுல்லா தரார் நள்ளிரவில் பதிவிட்டிருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டி வந்தாலும், அதனை மறுக்கும் பாகிஸ்தான், நடுநிலை விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற. ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் என்ற சாக்கில், “அடுத்த 24-36 மணி நேரத்திற்குள்” இந்தியா, பாகிஸ்தான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக “நம்பகமான உளவுத்துறை” இருப்பதாக பாகிஸ்தான் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அதிகாலை 2.30 மணிக்கு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதே வீடியோவில் ”பாகிஸ்தான் அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தைக் கண்டிக்கிறது. இந்தியாவின் எந்தவொரு இராணுவ நடவடிக்கைக்கும் “உறுதியாகவும் தீர்க்கமாகவும் பதிலளிக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்,
பதட்டங்களை அதிகரிக்க வேண்டாம் என மெரிக்கா இருநாடுகளையும் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டனும் இந்திய, பாகிஸ்தான் சமூகங்களுக்கிடையில் அமைதியைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.