
மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு எந்த வரியும் முன்பு இல்லை. தற்போது அதே நிலை தொடர்கிறது. 25 ரூபாய்க்கு மேல் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கினால், 5 சதவீதம் வருமான வரி கட்ட வேண்டும்.
ஆனால் தற்போது, மாதத்திற்கு 58 ஆயிரத்து, 333 ரூபாய் வரை சம்பளம் பெற்றாலும், 5 சதவீதம் வரி செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 58, 333 ரூபாய்க்குள் சம்பளம் வாங்குபவர்களுக்கு சுமார் 35 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
முன்னர் 50 ஆயிரம் ரூபாய் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்கள் 10 சதவீதம் வரி செலுத்த வேண்டும். 75 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள், 15 சதவீத வரி செலுத்த வேண்டி இருந்தது. தற்போது, 83,333 ரூபாய் வரை மாதச் சம்பளம் வாங்கினாலும், 10 சதவீத வரியை கட்டினால் போதுமானது.
முன்னர் மாதம் 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 15 சதவீதம் வரி இருந்தது. தற்போது, அது அப்படியே நீடிக்கிறது. இதே போல் மாதம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு 20 சதவீதம் வரி இருந்தது. அது தற்போதும் அப்படியே நீடிக்கிறது.
இதேப் போல் மாதம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு 30 சதவீத வரிப் பிடிப்பு இருந்தது. அது தற்போதும் நீடிக்கிறது. ஸ்டாண்டர்டு டிடெக்சன் எனப்படும், நிலையான வரி விலக்குகள் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து, 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது நிலையான வரி விலக்குகள் என்பது, வருமான வரி செலுத்த வேண்டிய தொகையில், 75 ஆயிரம் ரூபாய் வரை, கணக்கு காட்டி, அந்த தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக வீட்டு வாடகை, குழந்தைகளின் பள்ளி கட்டணச் செலவுகள் ஆகியவற்றை, அந்த வரியில் இருந்தே நாம் பெற்றுக் கொள்ளலாம்.
===