இந்தியா

இளைஞர்களுக்கான முக்கிய அறிவிப்புகள்! “காங்கிரசிடம் இருந்து காப்பி அடித்த நிர்மலா” விவரிக்கும் ப.சிதம்பரம்!

இது காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட விசயங்களை, முக்கிய திட்டங்களாக நிர்மலா அறிவித்துள்ளதாக, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது, “காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 30 இல், Employment-linked incentive என்ற திட்டத்தை கூறி இருந்தோம். அதாவது புதிதாக வேலை சேர்வோருக்கு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம். இதனை நிர்மலா தனது திட்டமாக அறிவித்துள்ளார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே போல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 11 இல் குறிப்பிடப்பட்டுள்ள இளைஞர்களுக்கான Apprenticeship scheme திட்டம் இதுவும் ஒன்றிய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அதேப் போல், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பக்கம் 31 இல் குறிப்பிடப்பட்ட ஏஞ்சல் வரிகள் ரத்து உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் வெற்றி பெறாமலேயே, பாஜக மூலம் அதனை அறிவிக்கச் செய்துள்ளது என ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதே போல் இந்த பட்ஜெட் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இது கூட்டணி கட்சிகளை தாஜா செய்யும் பட்ஜெட், க்ரோனி முதலாளிகளை தாஜா செய்யும் பட்ஜெட், காப்பி பேஸ்ட் பட்ஜெட் என ஒட்டுமொத்தமாக இது மோடியின் நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, இது குர்சி பச்சாவ், பட்ஜெட், அதாவது, நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் எனக் குறிப்பிட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்ய, பிற மாநிலங்களின் வருவாயை வைத்து, அவர்களுக்கு வெற்று வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பெரு முதலாளிகளான அம்பானி, அதானிகளை தாஜா செய்வதோடு, சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லாத பட்ஜெட் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் உள்ள சில நல்ல விசயங்கள், காங்கிரசின் பட்ஜெட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button