“இன்னும் 20 நிமிடத்தில் வந்து விடுவேன்” மனைவி அனுப்பிய மெசெஜ்!

அமெரிக்கா விமான விபத்து உலகையே உலுக்கியுள்ளது. 64 பேருடன் சென்ற பயணிகள் விமானம், ராணுவ ஹெலிக்காப்டருன் மோதி, போட்டோமாக் ஆற்றில் விழுந்துள்ளது. இந்த ஆறு ஆழம் குறைவான ஆறு எனத் தெரிகிறது. விபத்தில் சிக்கியவர்களை மீட்க சுமார் 300 நீச்சல் வீரர்கள் ஆற்றில் குதித்துள்ளனர்.கடும் பனி காரணமாக தேடும் பணியில் பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது மனைவியின் வருகைக்காக விமான நிலையத்தில் காத்திருந்த கணவரின் கண்ணீர் கதை மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹமத் ரஸா என்ற இளைஞர் தனது மனைவியின் வருகைக்காக வாஷிங்டன் விமான நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, அவரது மனைவி இன்னும் 20 நிமிடத்தில் இறங்கி விடுவேன் என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இவரும் அதற்கு பதில் அனுப்பியுள்ளார். ஆனால் இவர் அனுப்பிய பதில் undelivered நிலையில் உள்ளது.தனது மனைவி உயிருடன் இருப்பார் என்றும், யாராவது ஒரு வீரர் நிச்சயம் தனது மனைவியை ஆற்றில் இருந்து மீட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளதாகவும் அந்த இளைஞர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.தற்போது மைனஸ் 1 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுவதால், மீட்புப் பணிகள் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளன.