கமலா ஹாரிசுக்கு அமெரிக்க முஸ்லீம் எம்.பி. இல்ஹான் உமர் ஆதரவு!
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை நடத்தியவர் இல்ஹான் உமர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக அந்தக் கட்சியின் எம்.பி. இல்ஹான் உமர் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களை அமெரிக்காவில் ஒருங்கிணைத்து வருபவர் இல்ஹான் உமர். அதே நேரம் அதிபர் ஜோ பைடனையும் அரசியல் தளத்தில் ஆதரித்து வந்தார். டொனால்டு டிரம்பை மிகக் கடுமையாக எதிர்த்து வருபவர் இல்ஹான் உமர். இந்நிலையில், கமலா ஹாரிஸை ஆதரிப்பது சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
சக ஆளும்கட்சி தலைவர்களும் கமலா ஹாரிஸை ஆதரிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
பாலஸ்தீனத்தை ஆதரித்து, கொலம்பியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் இல்ஹான் உமரின் மகள் ஆவார். இதற்காக கல்லூரி விடுதியில் இருந்து அவர் நீக்கப்பட்டு, சில நாட்கள் உணவு, தங்குமிடம் இன்றி தவித்தது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.