7 கிலோமீட்டர் சுற்றளவு அழியும்- இந்திய அணு ஆயுதத்தின் பவர் என்ன தெரியுமா..?
இந்தியாவின் அணு ஆயுதங்கள் இஸ்லாமாபாத்தின் மீது வீசப்பட்டால் சுமார் 7 கிலோமீட்டர் அதன் பாதிப்பு இருக்கும்

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளும் அணு ஆயுதங்களை கொண்டிருப்பதால் நிதானத்தை கடைபிடிக்கும் படி உலகின் பல நாடுகளும் குரல் எழுப்பி வருகின்றன.
காரணம், இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டினால் ஏற்பட்ட அழிவுகளை உலகம் இன்றும் நினைவில் வைத்துள்ளது.இருப்பினும் இந்தியாவின் அணு ஆயுதங்களின் திறன் பற்றிய இங்கு சற்று விரிவாக பார்க்கலாம்.
இந்தியா முதன்முறையாக 1974 ஆம் ஆண்டு பொக்ரான் சோதனை தளத்தில் அணுகுண்டு வெடிப்பை நடத்தியது. “ஸ்மைலிங் புத்தர்” என பெயரிடப்பட்ட அந்த சோதனை இந்தியாவின் முதல் அணு சோதனையாகும்.இச்சோதனை மூலம் இந்தியா அணு ஆயுத கிளப்பில் இணைந்தது.இந்த வெடிகுண்டு 15 கிலோவுடன் 15000 டன் வெடிக்கும் திறனை கொண்டிருந்தது.
இந்த சக்திவாய்ந்த அணு இஸ்லாமாபாத் மீது காற்றில் வெடித்தால் சுமார் 75000 பேரை உடனே கொல்லும். 1லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைவர். சுமார் இரண்டரை கிலோமீட்டர் அளவு அதன் கதிர்வீச்சு தாக்கம் இருக்கும். இதில் உயிர்பிழைத்தவர்களில் பலருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.
இந்தியா அடுத்ததாக1998இல் “ஆபரேஷன் சக்தி” எனும் பெயரில் பொக்ரான் -2 சோதனையை நடத்தியது. மே 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் 5 அணு ஆயுத சோதனைகளை நடத்தி தன்னை அணு ஆயுத நாடாக அறிவித்தது இந்தியா. 45 கிலோ எடை கொண்ட இந்த குண்டு இஸ்லாமாபாத்தில் வெடித்தால் உடனடியாக சுமார் ஒன்றரை லட்சம் பேர் இறக்க நேரிடும்.மேலும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைவர்.இரன்டரை கிலோ மீட்டருக்கு கதிர்வீச்சு பரவும் அபாயம் உள்ளது. 7 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அதன் பாதிப்பு இருக்கும்.
இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களை உலக நாடுகள் கைவிட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இருப்பினும் அணு ஆயுதங்கள் உலகின் சக்திவாய்ந்த ஆயுதமாக பார்க்கபடுகிறது.பல நாடுகளும் தங்களை அணுஆயுத நாடுகளாக தகவமைத்துக் கொள்ள முயற்சிகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.