“இந்தியன் 2 எப்படி இருக்கு” உண்மையிலேயே ரசிகர்களை கதற விட்ட தாத்தா! சங்கரின் சரக்கு தீர்ந்து விட்டதா?

இந்தியன் 2 எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ரசிகர்கள் வேதனை…
கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட மோசமான மேக்கப்…
முதல் நாள் வசூல் சுமார் 15 கோடியை மட்டுமே எட்டியுள்ளதாக தகவல்…
20 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் கமல்ஹாசனின் இந்தியன் 2 சங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரும்பாலான முன்னணி யூடியூப் சேனல்கள் பேசி வைத்தார்போல், படம் நன்றாக இருப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
அதே நேரம் இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட தேசிய பத்திரிக்கைகளும், தமிழக முன்னணி சேட்டிலைட் ஊடகங்களும் படத்திற்கு நல்ல மதிப்பை கொடுக்கவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்.
இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். இந்த படம் ஒரு மூழ்கும் கப்பல், கமல் ஹாசனின் அற்புதமான நடிப்பு கூட, இந்த படத்தை காப்பாற்றாது என கூறியுள்ளார். மற்றொரு ரசிகரோ, கமல்ஹாசனின் நடிப்பு முந்தைய படங்களின் வெள்ளோட்டம் போல் உள்ளது, ஆழமான நுணுக்கமான நடிப்பு இல்லை என்றார்.
மற்றொரு ரசிகரோ, துணை நடிகர்கள் தங்களது திறமையை நிரூபிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ, ஒவ்வொரு ஃபிரோமிலும் பிரமாண்டத்தை நிலை நிறுத்தியிருந்தாலும் கூட, இந்த படம் ஒரு பேரழிவு என கூறியுள்ளார்.
சுமார் 2 நிமிடம் 58 வினாடிகள் ஓடக் கூடிய இந்த படம், இந்தியன் 3 படத்திற்கான டிரைலர் போன்று இருந்ததாகவும், சங்கர் ரசிகர்களை கவர தவறிவிட்டதாக ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசனின் மேக் அப் முட்டாள்தனத்தின் உச்சம் என திட்டி தீர்த்திருக்கிறார் ஒரு ரசிகர்.
கமல் ஹாசன் சிக்ஸ் பேக்குடன் சண்டையிடுவது அபத்தத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ளார் மற்றொரு ரசிகர்.
எனினும் கமலின் தீவிர ரசிகர்கள் இந்தப் படைத்தை ஆராத்திக்க தவறவில்லை. இந்தப் படத்தில் உள்ள அனைத்து கேள்விகளுக்கும், விமர்சனங்களுக்கும், 3வது பார்டில் உரிய விடை கிடைக்கும் என அவர்கள் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், லைகா, ஜெட் ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரித்துள்ள இந்தப் படம், முதல் நாளில் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்ததாக கூறப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கூட்டத்தை பொருத்தே, படத்தின் வெற்றி தோல்வி அமையும் எனத் தெரிகிறது.
=====