அல் மவாசி முகாம் தாக்குதலுக்கு பதிலடி – இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுத்திக்கள்!

இஸ்ரேல் கப்பலை தாக்கிய ஹவுத்திக்கள்…
காசா அல் மவாசி முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடி…
காசாவின் அல் மவாசி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 90 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 300 பேர் படுகாயம் அடைந்தனர். உலகையே உலுக்கிய இந்தச் சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் ஆகியும், இன்னும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தவில்லை.
இந்த நிலையில், இத்தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் கப்பலை தாக்கியுள்ளதாக ஏமன் ஹவுத்திப்படைகள் அறிவித்துள்ளன. இஸ்ரேலின் MSC UNIFIC என்ற கப்பல் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த போது, ஏமன் வான்படை, கடற்படை, ஏவுகணை பிரிவு ஒருங்கிணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பாலிஸ்டிக் மிசல்கள், டிரோன்களை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இஸ்ரேலின் ஈழட் துறைமுக நகரத்தை குறிவைத்தும், டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தங்களது தாக்குதல் நோக்கம் நிறைவேறியதாக ஏமன் படைகள் தெரிவித்துள்ளன.
அதே நேரம் அரபு நாடுகள் மற்றும் முஸ்லீம் நாடுகள் தங்களது ராணுவங்களை ஒருங்கிணைத்து, இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது மதக்கடமை மட்டுமல்ல, மனிதாபிமான, நன்னெறி நடவடிக்கை என ஏமன் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி தெரிவித்துள்ளார்.
====