உலகம்

இஸ்ரேலை அங்குலம் அங்குலமாக படம் பிடித்து வெளியிட்ட ஹிஸ்புல்லா – பெரும் பீதி!

இஸ்ரேலின் முக்கிய நகரங்களை அங்குலம் அங்குலமாக படம் எடுத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா…
இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளை ஏமாற்றிய ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானங்கள்…
வான் பாதுகாப்பில் உலகின் நம்பர் 1 நாடு என்ற பெயரை இழந்த இஸ்ரேல்..

உலகின் மிகவும் பாதுகாப்பு மிகுந்த நாடாக இஸ்ரேல் கருதப்படுகிறது. அந்நாட்டின் ராணுவ ரகசியங்கள் மிகவும் பத்திரப்படுத்தி, வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் ஹிஸ்புல்லா வெளியிட்ட ஒரு வீடியோ, இஸ்ரேலை மட்டுமின்றி, அதன் நட்பு நாடுகளாக, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
Hoopoe mission

என்ற பெயரில் 9 நிமிடம் ஓடக் கூடிய வீடியோ ஒன்றை ஹிஸ்புல்லா வெளியிட்டது. அந்த வீடியோவில், Rafael Advanced Defense Systems எனப்படும் ராணுவ தொழிற்சாலை படம் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள், ஆயுத கிடங்குகள், சோதனை மையங்கள் முக்கியமாக ஐயன் டோம் தொழிற்சாலை ஆகியவை படம் பிடிக்கப்பட்டு, அவை எங்கு உள்ளன என வரைபடத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கவனிக்கத்தக்க விசயம் வீடியோ மிகத் தெளிவான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லாவின் ஆள் இல்லா விமானங்கள், இஸ்ரேலின் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஏமாற்றி, சாதுர்யமாக உள்ளே நுழைந்து, படம் எடுத்துக் கொண்டு, மீண்டும் பத்திரமாக திரும்பியுள்ளன.

9 நிமிடம் மற்றும் 30 வினாடிகள் ஓடக் கூடிய இந்த வீடியோ ஒரு பகுதி தான் என்றும், இது போல் அடுத்தடுத்து பல வீடியோக்கள் வெளியாகும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் முக்கிய ராணுவ ரகசியங்களை ஹிஸ்புல்லா கைப்பற்றி இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னதாக இதுகுறித்து பேசிய ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா, லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தால், அதற்கு பிறகு, தங்களது அமைப்பு எந்த விதமான போர் விதிமுறைகளையும் பின்பற்றாது என்றும், தங்களின் தாக்குதலில் இருந்து, இஸ்ரேலின் எந்தப் பகுதியும் தப்பிக்க முடியாது என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button