ஒரே நேரத்தில் 40 ராக்கெட்டுகளை ஏவிய ஹிஸ்புல்லா! திணறிய ஐயன் டோம்! தீக்கிறையான இஸ்ரேல் கிராமங்கள்!

ஒரே நேரத்தில் சீரிப்பாய்ந்த ஹிஸ்புல்லாவின் 40 ராக்கெட்டுகள்…
தடுக்க முடியாமல் திணறிய ஐயன் டோம்…
தீக்கிரையான இஸ்ரேல் கிராமங்களில் மின்வெட்டு…
இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் பல போராளிகளை இழந்த ஹிஸ்புல்லா கடந்த சில நாட்களாக கடும் பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை, Safad என்ற பகுதியை குறிவைத்து, ஹிஸ்புல்லா கடும் தாக்குதல் நடத்தியது. இந்த பகுதி லெபனானிடம் இருந்து இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி ஆகும்.
ஒரே நேரத்தில் 40 ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா ஏவியதால், இஸ்ரேலின் ஐயன் டோம்கள் அதனை தடுக்க முடியாமல் திணறின. இதனால் அந்த நகரின் பல இங்கள் தீக்கிரையானது. இதனால் மின்வெட்டு ஏற்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதே போல் மற்றொரு இடத்தில் நடைபெற்ற தாக்குதலில், இஸ்ரேலின் வடக்கு மண்டல வான்படைத் தலைமை அலுவலகம் மீது ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில், இஸ்ரேல் வீரர்கள் பலர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் ஹிஸ்புல்லாவின் ராணுவ ஊடகம், கூறியுள்ளது. ஆனால் இஸ்ரேல் தரப்பில் இருந்து பலி எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.
இதே போல் மேலும் பல இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து, ஆள் இல்லா விமானம் மூலமாகவும், பிற ஆயுதங்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது.
===