ஒரே நாளில் 200 தாக்குதல்களை நடத்திய ஹிஸ்புல்லா! பற்றி எரியும் வடக்கு இஸ்ரேல்!

ஹிஸ்புல்லாவின் 3ஆம் கட்டத் தலைவரான முகமது நிமா நாசர் என்பவர் இஸ்ரேல் தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார். இதற்கு பதிலடியாக வியாழக்கிழமை ஒரே நாளில் 200 ஏவுகணைகள், 20 டிரோன்கள் மூலம் தாக்குதல்களை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது. இதனால் இஸ்ரேலின் வடக்கு பகுதிகள் காட்டுத் தீ ஏற்பட்டது போல் பற்றி எரிந்து வருகின்றன.
கலீலி மற்றும் கோலன் குன்றுகளில் சுமார் 10 இடங்களில் அணைக்க முடியாத அளவுக்கு தீ பற்றி எரிந்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்து இன்னும் முழு தகவல் வெளியாகவில்லை.
அதே நேரம் காயம் அடைந்த 2 பெண்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக இஸ்ரேலின் Magen David Adom ambulance service நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே போல், ஏக்கர் என்ற பகுதியில் ஷாப்பிங் மால் ஒன்றின் மேற்கூரை தீப்பிடித்து எரியும் வீடியோ வெளியாகியுள்ளது.
===