நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அதிர வைத்த ஹக்கா நடனம்- பெண் எம்.பி.யின் நூதன எதிர்ப்பு!

நியூசிலாந்தின் இளம் எம்பியான ஹனா-ரவ்ஹிதி மைபி-கிளார்க் தனது ஹாக்கா நடனத்தால் மீண்டும் வைரலாகி வருகிறார். சுதேசி ஒப்பந்த மசோதாவுக்கு எதிரான போராட்டத்தின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாவோரி பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, சட்ட நகலையும் நாடாளுமன்றத்தில் கிழித்தெறிந்து உலகின் கவனத்தை மீண்டும் தன்பக்கம் ஈர்த்துள்ளார்.
நியூசிலாந்து அரசியல் வரலாற்றிலேயே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் வைதாங்கி ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதற்கான மசோதா மீதான முன்மொழிவை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியான ஏசிடி கொண்டு வந்தது.
நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது நியூசிலாந்து நாட்டின் பழங்குடிகளான மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் எம்பி, ஹக்கா எனப்படும் மாவோரிகளின் நடனம் ஆடி எதிர்ப்பு தெரிவித்ததோடு, மசோதா நகலையும் ஆவேசத்துடன் கிழித்தெறிந்தார். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிற மாவோரி இன எம்.பி.க்கள் மற்றும் பார்வையாளர்கள் மாவோரி நடனமாடினார். இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, சபாநாயகர் சபையை ஒத்திவைத்தார்.
இந்த மசோதாவில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் மாவோரியர்களுக்கான சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது எனக்கூறப்பட்டாலும், உண்மையில் இந்த மசோதா மவோரி பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.