ரூ. 15 கோடி, தங்க முலாம் பூசப்பட்ட ராணுவ கவச வாகன மாடல் சொகுசுக் கார் – ஆனந்த் அம்பானிக்கு பரிசு!

ராணுவ கவச வாகன மாடலில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கார்…
ரூ. 15 கோடி மதிப்பிலான காரை பரிசாக பெற்ற ஆனந்த் அம்பானி…
ஆனந்த் அம்பானி தனது ஜியோ கேரேஜில் பல விலை உயர்ந்த கார்களை வைத்துள்ளார். சுமார் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள Rolls Royce Cullinan கார்களை வைத்துள்ளார். ஒன்று இரண்டு அல்ல, இந்த வகை கார்கள் 9 வரை அவரிடம் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு கார் திருமணத்துக்கு முன்பு அண்மையில் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள Ferraris கார்கள், ஆறு உள்ளன. சுமார் 12 கோடி மதிப்புள்ள Rolls Royce sedans கார்கள் இரண்டு, சுமார் 3 கோடி மதிப்புள்ள Maybach bulletproof sedans, சுமார் 5 கோடி மதிப்புள்ள Lamborghini Urus, சுமார் 1 கோடி மதிப்புள்ள Tesla கார்கள் வைத்துள்ளது அம்பானி குடும்பம்.
அவர்களது வாகன அணிவகுப்பில், 5 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் G63 AMG மாடல் கார்கள், 3 கோடி மதிப்புள்ள Range Rover, 50 லட்சம் மதிப்புள்ள MG Gloster, 1 கோடி மதிப்புள்ள Mercedes-Benz V-Class உள்ளிட்ட பல கார்கள் இடம் பெறுவது வழக்கம்.
இந்த நிலையில், ஒரு வெளிநாட்டு விருந்தினர் ஆனந்த் அம்பானிக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள Dartz SUV கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக மோட்டார் வாகன இணையதளமான cartoq செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கார் ராணுவங்களில் பயன்படுத்தப்படும் கவச வாகனங்களின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் தங்க பூச்சு வேலைகள் இடம்பெற்றுள்ளன.
ஹாலிவுட் திரைப்படமான “The Dictator.” படத்தில் இடம்பெற்று உலகம் முழுவதும் பிரபலமடைந்தது இந்த கார்.
இந்த கார் ஆனந்த் அம்பானியின் விருப்பங்களுக்கு ஏற்ப கஷ்டமைஸ் செய்யப்பட்ட காராக உள்ளது.
எனினும் இந்தியாவில் இந்த கார் பரிசளிக்கப்படவில்லை என்றும் ஆனந்த் அம்பானியின் வெளிநாட்டு இல்லங்களில் ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதள செய்தி தெரிவித்துள்ளது. அதே நேரம் இந்தக் கார் விரைவில் மும்பைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
====