தன்னை விட 30 வயது குறைந்த Girl Friend! 2 குழந்தைகள்! அம்பலமான ரகசியம்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தற்போது வயது 71. அவர் தனது முதல் மனைவியை பல ஆண்டுகளுக்கு முன்பே விவாகரத்து செய்து விட்டார். அவருக்கு முதல் மனைவி லியுட்மிலா புதின் மூலம் மரியா, கத்ரினா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் புதின் தன்னை விட 30 வயது குறைந்த, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா என்பவரை காதலித்து, லிவிங் டுகதர் வாழ்க்கை வாழ்ந்து வரும் செய்தி, வலம் வந்தது.இதனையடுத்து 2008ஆம் ஆண்டு, புதின் தனது மனைவியை விவகாரத்து செய்தார்.இந்த நிலையில், ஒரு புலனாய்வு இணைய தளம், தனது பெண் தோழி மூலம் விளாடிமிர் புதினுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளதாக புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
அதில் ஒரு குழந்தைக்கு 9 வயதும், மற்றொரு குழந்தைக்கு 5 வயதும் ஆவதாகவும், இவர்கள் மாஸ்கோவில் அதி உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட பகுதியில் ரகசிய கட்டிடத்தில், வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆண் குழந்தைக்கு இவான் என்றும் மற்றொரு குழந்தைக்கு விளாடிமிர் ஜுனியர் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.
2வது மனைவி மீது பெரும் காதல் கொண்டுள்ள விளாடிமிர் புதின் அவருக்காக உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாக்களை வாங்கி, பரிசாக கொடுத்துள்ளதாக அமெரிக்காவின் டெல்கிராப் உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்திகளை அள்ளி விட்டு வருகின்றன.