உலகம்

காசா – இஸ்ரேல் பேச்சுவார்த்தையில் சுணக்கம் – ஹமாஸ் எச்சரிக்கை!

இஸ்ரேல் – அமெரிக்காவின் தொடர் குளறுபடிகளால், காசா போர் நிறுத்த விவகாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது, அமெரிக்கா, இஸ்ரேல் முன்மொழிந்துள்ள சமாதான ஒப்பந்தங்கள், போரை தொடருவதற்கே வழிவகை செய்யும் என ஹமாஸ் கூறியுள்ளது. அதன் காரணமாகவே அவர்களது முன்மொழிவை நிராகரிப்பதாக ஹமாஸ் மூத்த தலைவர் பாசெம் நயிம் தெரிவித்துள்ளார்.

தற்போது, அவர்கள் முன்வைத்துள்ள நிபந்தனைகளில், காசாவில் நிரந்தர போர் நிறுத்தம், 60 நாட்கள் சண்டை நிறுத்தம், நிவாரண உதவிகளை விரைவுபடுத்துதல் ஆகிய எந்த விவகாரம் பற்றியும் பேசப்படவில்லை என்றும் மாறாக கைதிகள் பரிமாற்றம் பற்றி மட்டுமே பேசப்பட்டுள்ளதாக ஹமாசின் மூத்த தலைவர் பாசெம் நயிம் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button