சினிமா

நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி மறைவு..

பாண்டியராஜன் வி கே ராமசாமி பாண்டியன் சீதா உள்ளிட்ட பலர் நடித்த ஆண்பாவம் திரைப்படத்தில் பாண்டி ராஜருக்கு பாட்டி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை கொல்லங்குடி கருப்பாயி உடல் நலக்குறைவு காரணமாக சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் காலமானார். அவருக்கு வயது 99.

99 வயதில் மரணமடைந்த பழம்பெரும் நடிகை.. ரசிகர்கள் இரங்கல் | Actress Kollangudi Karuppayi Died At 99

நாட்டுப்புற பாடல் பாடுவது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் பாட்டி கதாபாத்திரத்தில் சில படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கோபாலா கோபாலா, கபடி கபடி, ஆயிசு நூறு ஆண்களை நம்பாதே போன்ற திரைப்படங்களில் நடித்தவர்.

தமிழ்நாட்டு அரசின் கலைமாமணி விருது பெற்ற நடிகை கொல்லங்குடி கருப்பாயி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடலை பாடி புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button