உலகம்
3 லட்சம் மக்கள் வெளியேற்றம் – இஸ்ரேலின் உச்சகட்ட அராஜகம்!

காசா மீதான இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளின் தாக்குதல் 279வது நாளை அடைந்துள்ளது. காசா சிட்டி பகுதியில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உத்தரவிட்ட இஸ்ரேல், கட்டுப்பட மறுப்பவர்களை சரமாரியாக சுட்டுக் கொன்று வருகிறது.
சுஜேயா பகுதியை கடந்த 2வாரமாக முற்றுகையிட்ட ஆக்கிரமிப்புப் படை கொடூரமான இனப்படுகொலை அரங்கேற்றியுள்ளது. சாலைகளில் உடல்கள் சிதறிக் கிடப்பதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் அங்கிருந்து பாதியளவு படைகள் வெளியேறியுள்ளன.
தற்போது, தல் அல் ஹவ்வா என்ற பகுதியை முழுமையாக முற்றுகையிட்டு, கொடூரத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
=========