உலகம்

ஞாயிற்றுக்கிழமை நடந்த சம்பவங்கள் – காசாக் குழுக்கள் வெளியிட்டுள்ள பட்டியல்!

கடந்த 4 நாட்களாக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் மற்றும் காசா போராளிக்குழுக்கள் இடையேயான சண்டை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பக்கம் அப்பாவி காசா மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வரும் நிலையில், மறுபுறம் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு, கடும் பதிலடியை காசா குழுக்கள் கொடுத்து வருகின்றன.வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களில் மட்டும் சுமார் 6 ஆக்கிரமிப்பு வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை உண்மையல்ல, இதை அதிக எண்ணிக்கையில் சேதாரம் விளைவித்ததாக காசா குழுக்கள் கூறி வருகின்றன.

Palestinian militants from the joint operations room of the Palestinian resistance factions attend the national conference on the first anniversary of the May 2021 conflict between Israel and Hamas in Gaza city on May 22, 2022.
(Photo by Majdi Fathi/NurPhoto via Getty Images)

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஹமாசின் அல்கஸ்ஸாம் ராணுவம் ஆக்கிரமிப்பு அதிகாரி ஒருவரை, குறிவைத்து சுட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. காசா சிட்டியின் தல் அல் ஹவாவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த துல்லிய வீடியோவையும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.மேலும் டெல் அவிவ் நோக்கி எம் 90 என்ற நெடுந்தொலைவு ராக்கெட்டையும் ஹமாஸ் வீசியுள்ளது.இதே போல் பிற பாலஸ்தீன குழுக்கள் தங்களது தாக்குதல் விபரங்பளை பட்டியலிட்டுள்ளன.இஸ்ரேல் ராணுவ வாகனம் ஒன்றை தகர்த்ததாக அல்குத்ஸ் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் படையினர் குழுமியிருந்த இடத்தை நோக்கி ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக அல் அக்ஸா தியாகிகள் படைத் தெரிவித்துள்ளது.இஸ்ரேல் டாங்கியை குறிவைத்து, சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் மூலம் கன்னிவெடித் தாக்குதல் நடத்தியதாக உமர் அல் காசிம் படைப்பிரிவு அறிவித்துள்ளது. இதே போல் மேலும் பல தாக்குதல்களின் பட்டியல்களை காசா போராளிக்குழுக்கள் வெளியிட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button