உலகம்

இளவரசியே மனைவியாக கிடைத்தும், இன்னொரு பெண்ணுடன் உறவு! ஓராண்டில் விவாகரத்து!

கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு…
அதிரடியாக விவாகரத்து செய்த துபாய் இளவரசி…
பிரதமரின் மகள் எடுத்த பரபரப்பு முடிவு…

ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துபாய் மன்னருமான முகமது பின் ரசீத் அல் மக்தூமின் மகளான ஷேக் மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இண்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

24 வயதே ஆன ஷேக் மஹ்ரா உலக அழகிகளையே வீழ்த்தும் அளவிற்கு அழகானவர். அப்படி இருந்தும் அவரது கணவர் ஷேக் மனா இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை வெளிப்படையாக அறிவித்து, தனது விவகாரத்து முடிவை வெளியிட்டுள்ளார் மனைவி ஷேக் மஹ்ரா.

ஷேக் மஹ்ராவின் தந்தை தான், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ரஷித் அல் மக்தூம். இவர் பிரதமர் மோடிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார்.இவருக்கு மொத்தம் 7 மனைவிகள் இருந்தனர். அதில் 6 பேரை விவாகரத்து செய்து விட்டார். முதல் மனைவியை மட்டும் இன்னும் விவாகரத்து செய்யவில்லை.

இந்த 7 மனைவிகள் மூலம் இவருக்கு 26 குழந்தைகள் உள்ளனர். இந்த 26 குழந்தைகளும், இளவரசர் அல்லது இளவரசி பட்டத்துடன் உள்ளனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும், இளவரசர் மற்றும் இளவரசி பட்டங்களை அடுத்தடுத்து பெறுவார்கள்.

துபாய் அரச குடும்பத்தை House of Maktoum என அழைக்கின்றனர். அரசு குடும்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பல ஆயிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. இவர்களுக்கு அரசிடம் இருந்து பல நூறு கோடி ரூபாய் பணமும் செலவுக்கு தொடர்ந்து வழங்கப்படுகிறது.

மன்னர் ஆட்சி நடைபெறுவதால் எண்ணெய் கிணறுகள், தொழில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை அரசு குடும்பம் யாருக்கும் கணக்குக் காட்டத் தேவையில்லை. எனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளில், காசை தண்ணீராக செலவு செய்து சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்.

அமெரிக்காவுடன் நெருங்கிய உறவில் இருப்பதால், அமெரிக்க ராணுவம் இவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குகிறது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button