வறண்ட பாலைவனங்கள் பசுமை புல்வெளிகளாக மாறிய விநோதம்-வைரல் ஆகும் சவுதி அரேபியா!

சவூதி அரேபியாவில் சமீப நாட்களாக பெய்த கனமழையால் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பசுமை புல்வெளிகளாக காட்சியளிக்கினறன.
பல இடங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் ஏறத்தாழ 40% அளவு பாலைவனங்களை கொண்டுள்ளது.
ஒட்டகம் போன்ற பாலைவன உயிரினங்களுக்கும் பசுமை பாலைவனம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
குறிப்பாக இஸ்லாமியர்களின் புனித பூமியான மக்கா மற்றும் மதினா நகரங்களில் தோன்றியுள்ள இந்த மாற்றம் புனிதப்பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினரை வெகுவாக கவர்ந்துள்ளது.
கடந்த காலங்களை விட குறிப்பிடத்தக்க அளவு அதிகமான மழைப்பொழிவே இந்த மாற்றத்திற்கு காரணம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நாசாவின் சமீபத்திய செயற்கைக்கோள் படங்களும் பசுமை போர்த்திய சவுதியின் பாலைவனங்களை தெளிவாக காட்டுகிறது.
மழைக்கு பிறகு உருவான புல்வெளிகளில் ஒட்டகம் அமைதியாக மேயும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
=========