உலகம்

டெல் அவிவை தாக்கிய டிரோன் இது தான்! வீடியோ வெளியிட்ட ஹவுத்திக்கள்!

டெல் அவிவை டாக்கிய டிரோன் பற்றிய வீடியோ வெளியீடு…
முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக ஹவுத்திக்கள் விளக்கம்…

இஸ்ரேலின் டெல்அவிவ் மீது ஹவுத்திக்கள் ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்திய நிகழ்வு உலகம் முழுவதும் பேசு பொருளானது. அதுபற்றிய கேள்விகள் தொடர்ந்து எழுந்தது. இந்நிலையில், அந்த ஆள் இல்லா விமானம் பற்றிய வீடியோ மற்றும் விபரங்களை ஏமன் ஆயுதப் படைகள் வெளியிட்டுள்ளன.

ஆள் இல்லா விமானத்துக்கு Yafa என்று பெயரிடப்பட்டுள்ளனர். Yafa என்பது, டெல் அவிவ் நகரத்தின் பழைய. உண்மையான அரபு பெயர் ஆகும். பாலஸ்தீனியர்களிடம் இருந்து அந்த நகரத்தை ஆக்கிரமித்து, இஸ்ரேல் அதற்கு டெல் அவிவ் என்று பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த Yafa ஆள் இல்லா விமானம் அதிகமான வெடிமருந்துகளை சுமந்து சென்று, நீண்ட தூரம் சென்று தாக்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளனர். ஏமனுக்கும், இஸ்ரேலுக்கும் வான் வழியாகவே சுமார் 3000 கிலோ மீட்டர் தூரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் ராடார் உள்ளிட்ட கருவிகளின் பார்வையில் சிக்காமல் செல்லும் வகையில் இந்த ஆள் இல்லா விமானத்தை வடிவமைத்துள்ளனர். இதன்காரணமாக அந்த விமானம் இஸ்ரேலின் அனைத்து வான் பாதுகாப்பு அமைப்புகளையும் மீறி டெல் அவிவை தாக்கியது.

இந்த விமானம், எந்த நாட்டிடம் இருந்தும் வாங்கியது அல்ல. முழுக்க முழுக்க ஏமனில் தயாரிக்கப்பட்ட ஒன்று என அந்நாட்டின் தலைவர் சையது மாலிக் அல் ஹவுத்தி விளக்கியுள்ளார். பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை மிக நீண்ட போருக்கு ஏமன் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button