வைரல்

முகேஷ் அம்பானி, அமிதாப், சச்சின் குடிக்கிற பால் எங்கிருந்து வருது தெரியுமா?

இதுக்கு முன்னாடி விராட் கோலி, அனுஷ்கா சர்மா குடிக்கிற பிளாக் வாட்டர் ட்ரெண்டிங் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. தண்ணிக்கே இவ்வளவு பாக்குறாங்கன்னா, செலிபிரிட்டிங்க தினமும் குடிக்கிற பால் எவ்வளவு காஸ்ட்லியா இருக்குங்குற கேள்வி எழுந்திருக்கும் இல்லையா. அதைப் பத்தி தான் இப்ப பாக்கப்போறோம். மகாராஷ்டிராவோட புனோவுல இயங்கிக்கிட்டு இருக்குற பாக்யலட்சுமி பால் பண்ணை தான் இந்தியாவிலேயே ரொம்ப பிரபலமான, இன்னம் சொல்லனுன்னா பிரபலங்களுக்கு பிடிச்சமான பாலை உற்பத்தி பண்றாங்க. அம்பானி குடும்பத்துல ஆரம்பிச்சி அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ரித்திக் ரோஷன், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வரைக்கும் இவங்களோட கஸ்டமர் லிஸ்ட் நீண்டுக்கிட்டே போகுது.

Pride of Cows அப்படிங்கிற பேருல தேவேந்திர ஷாங்கிறவர் ஆரம்பிச்ச இந்த பால் வியாபாரம் இப்போ, 2,000 க்கும் மேற்பட்ட டச்சு ஹோல்ஸ்டீன் பசுக்களோட, 26 ஏக்கர் பரப்பளவுள்ள பண்ணையில அமோகமா போய்ட்டு இருக்கு. இங்க இருக்குற ஒவ்வொரு பசுவோட விலையும் 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரைக்கும் இருக்குமாம். தினமும் 25 ஆயிரம் லிட்டருக்கும் அதிகமா பால் உற்பத்தி செய்யுறங்க. இந்த பண்ணையோட ஒரு லிட்டர் பால் விலை 90 ரூபாய். இவ்வளவு விலை கொடுத்து பிரபலங்கள் இந்த பாலை ஏன் போட்டி போட்டு வாங்கிக்குடிக்கிறாங்கன்னு பார்த்தா, பால்ல இருக்குற சத்தை விட அதை கறக்க இவங்க பயன்படுத்துற ஹைஜீனிக் நடைமுறை தான் காரணமாம்.

பண்ணையையும், பசுவையும் இங்க ஒருநாளைக்கு 3 முறை சுத்தம் பண்றாங்க, பசுக்களுக்கு சோயாபீன், சீசனல் காய்கறிகள், ஆல்பா புல், மக்காச்சோளம்-ன்னு ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுது. பால் கறக்க, பாட்டில் போடன்னு எல்லாமே ஹைடெக் ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துறாங்க, No hand touching.இதெல்லாம் விடுங்க மாட்டுக்கு குடிக்க தண்ணீ கூட ஆர்.ஓ.வாட்டர் தான் கொடுக்குறாங்கன்னா பாத்துக்கோங்களேன். இதனால் தான் இந்த பாலை மும்பை மற்றும் புனேவுல மட்டும் 22 ஆயிரத்துக்கும் அதிகமானவங்க வாங்கிக்குடிக்கிறாங்க.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button