உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த நாய் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

உலகின் மிக விலையுயர்ந்த நாய் எது என்று உங்களுக்குத் தெரியுமா?. அதுவும் ஒரு இந்தியரால் வளர்க்கப்படுதுன்னு தெரியுமா?. ஓநாய்க்கும், ரொம்பவே சக்திவாய்ந்த காவலுக்கு பெயர் போன காகசியன் ஷெப்பர்ட் இன நாய்க்கும் இடையே கலப்பினம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட, கடபோம் ஒகாமி அப்படிங்கிற நாய் தான் உலகத்துலேயே மிகவும் காஸ்ட்லியான நாய். 75 கிலோகிராம் எடை மற்றும் 30 அடி உயரத்தோட பார்க்கவே இந்த நாய் ரொம்ப கம்பீரமா காட்சியளிக்குது. தினமும் 3 கிலோ கோழி இந்த நாய்க்கும் உணவா கொடுக்கப்படுது. இந்த நாயோட விலை 50 கோடி ரூபாய்.
அதாவது இந்த காசை வச்சி நீங்க இந்தியாவுல 55 கிலோ தங்கம் வாங்கலாம். இதோட ஓனர் பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ், நாய் பிரியரான இவர்கிட்ட 150 க்கும் மேற்பட்ட வெவ்வேறு இன நாய்கள் இருக்கிறது.இருந்தாலும், அமெரிக்காவுல பிறந்து வளர்ந்த கடபோம் ஒகாமியை 50 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்காரு. சதீஷ், இந்த நாயைக் கொண்டு டாக் ஷோக்களில் பங்கேற்பது, சோசியல் மீடியாக்களில் வீடியோ வெளியிடுவது என கல்லா கட்டி வருகிறார். சமீபத்தில் இந்த நாயோட ரெட் கார்ப்பெட் வாக் வீடியோ 3 மில்லியன் வியூஸ்கள வாரிக்குவிச்சியிருக்கு.