மோடியுடன் கைகுலுக்க பிரான்ஸ் அதிபர் மறுத்தாரா?

பிரான்ஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுமென்றே கைகுலுக்கவில்லை என்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானவை என்றும், நீண்ட வீடியோவில் சிறிய கிளிப் மட்டுமே பரப்பப்படுவதாக கூறப்படுகிறது.மற்ற உலகத் தலைவர்கள் அமர்ந்திருந்த AI உச்சி மாநாட்டிற்கு நுழைவதற்கு முன்பே மக்ரோனும் மோடியும் நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வெளியே சந்தித்து, வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு, கைகுலுக்கிக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மோடியின் இந்த ஆறாவது பிரான்ஸ் பயணத்தின் போது பிரான்ஸில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வேண்டுமென்றே கைகுலுக்கவில்லை என்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த விவாதங்களுடன், இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வலுவான இருதரப்பு உறவுகளை குறித்தும் விவாதிக்க பட்டதாக கூறப்படுகிறது