உள்ளூர் உடையுடன் வந்த முதியவருக்கு அனுமதி மறுப்பு – இழுத்து மூடப்பட்ட பெங்களூரு ஷாப்பிங் மால்!

பாரம்பரிய உடையுடன் வந்த கன்னட முதியவருக்கு அனுமதி மறுப்பு…
ஷாப்பிங் மாலை இழுத்து மூடி நடவடிக்கை எடுத்த சித்தராமையா அரசு…
உரிமையாளர், Security guard உள்ளிட்டவர்கள் மீது வழக்குப் பதிவு…
அரைகுறை ஆடைகளை அணிந்து வரும் வெளிநாட்டு, உள்நாட்டு, பெண்கள், ஆண்களை அனுமதிக்கும் MALL கள், மண்ணின் பாராம்பரிய உடைகளை அவமதித்து, அவ்வப்போது, தங்களுக்கு தாங்களே குழி பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தான் பெங்களூருவில் உள்ள பிரபல வணிக வளாகமான GT World MALL ஆன பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஹவேரியைச் சேர்ந்த பக்கீரப்பா என்ற முதியவர் தனது, மகன் மற்றும் மனைவியுடன் அங்கு சினிமா பார்க்கச் சென்றுள்ளார்.
முதியவர் பக்கீரப்பா கர்நாடகாவின் பாரம்பரிய உடையான, வெள்ளை வேட்டை, மற்றும் பன்சே எனப்படும் வேட்டியை அணிந்து சென்றுள்ளார். இதனை பார்த்த காவலர், இந்த உடைக்கு அனுமதி கிடையாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் கன்னட ஊடகங்களில் வெளியாகி பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுத்தது.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் களமிறங்கிய கன்னட அமைப்புகள், போராட்டங்களில் குதித்தன. இதனையடுத்து, அந்த வணிக வளாகம் உடனடியாக மூடப்பட்டுள்ளது. அந்த வணிக வளாகத்தின் உரிமையாளர், தடுத்து நிறுத்திய பாதுகாவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 7 நாட்களுக்கு அந்த வணிக வளாகம் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிக வளாகங்கள் கட்டுவதற்கு, மண்ணின் மைந்தர்களிடம் இருந்து நிலத்தை வாங்குவது பிறகு, வெளிநாட்டினர், பணக்காரர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது என்ற பெரு நிறுவனங்கள் செய்து வரும் அடாவடிகளை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
===