நடு வானில் விபரீத நடனம் கழுகுகளின் வித்தியாசமான திருமணச் சடங்கு – வியக்க வைக்கும் அதிசயங்கள்!

மனிதர்கள் பல்வேறு திருமண சடங்குகளை செய்வது போல், கழுகுகளுக்கும் திருமணச் சடங்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றிய சுவாரஸ்மான தகவல்களை பார்க்கலாம்.
தனது ஜோடியை தேர்வு செய்வதில், ஆண் கழுகை விட, பெண் கழுகுகளுக்கு அதிக உரிமை உள்ளது. பெண் கழுகுகள் தான் தனக்கான ஆண் இணையை தேர்வு செய்கின்றன. அப்படி தேர்வு செய்வதற்கான சடங்கு தான் cartwheel courtship flight. நடுவானத்தில் ஆண் மற்றும் பெண் கழுகுகள் தங்களது கால் விரல்களை பின்னி நடனமாடுகின்றன.
பின்னர் இரண்டும் ஒன்றாக சேர்ந்த தரையை நோக்கி வீழ்கின்றன. தரையை நெருங்கும்போது, ஒன்றை ஒன்று விடுவித்துக் கொள்ளும்.சில நேரங்களில் சில கழுகுகள் தரையில் மோதிவிடும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.இந்த நிகழ்வுகளின் மூலம் ஆண், பெண் கழுகுகள் தங்களது இணையின் பலம், பலவீனத்தை அறிந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு போன்றது. ஆண் பெண் கழுகுகள் இடையே திருமணம் நடந்து விட்டால் கூடுகளில் தான் இனப்பெருக்கம் நடைபெறும். புதிதாக பிறந்த குஞ்சுகளை ஆண் கழுகும் சேர்ந்து பராமரிக்கிறது. சில நேரங்களில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலை மாறி, கூடுதலாக இன்னொரு பெண் கழுகும் கூட்டில் இடம் பெறும் நிகழ்வுகள் நடைபெறுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அப்படி வரும் இன்னொரு புதிய பெண் கழுகை, பழைய பெண் கழுகு பாசத்தோடு பராமரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது அப்படியே மனிதர்களின் நேர் எதிர் நடைமுறை.வழுக்கைத் தலை கழுகு இனங்களில் பெண் கழுகு ஒரு முறை தனது ஆண் ஜோடியை முடிவு செய்து விட்டால் கடைசி வரை அந்த ஒரே ஆண் கழுகுடன் ஒரே கூட்டில் வாழும்.
ஆண் கழுகு கூட்டில் இருந்து சென்றுவிட்டு, நீண்ட நாள் திரும்பாமல் இருந்தால், மற்றொரு ஆண் கழுகை பெண் கழுகு தேர்வு செய்து கொள்ளும். இது மனிதர்களின் மறுமணத்திற்கு சமமானது. கழுகுகளின் சர்வைவல் ஆஃப் பிட்னசுக்கு இந்த மறுமணம் தேவைப்படுகிறது.
======