சரிந்த வசூல் – ஜவானிடம் தோற்ற கல்கி!

ஜவான் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் திணறும் கல்கி….
படத்தின் பட்ஜெட்டை விட கூடுதலாக 20 கோடி மட்டுமே வசூல்…
சாருக்கான் நடித்து, அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, இந்திய அளவில் 640 கோடி ரூபாய் நிகர வசூலை ஈட்டியது.
இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் கல்கி திணறி வருகிறது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, இந்திய அளவில் 620 கோடி ரூபாய் மட்டுமே நிகர வசூல் ஈட்டியுள்ளது. ஜவான் வசூலை முந்த இன்னும் 20 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் தற்போது, நாள் ஒன்றுக்கு 1 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து வருகிறது.
இதனால் இன்னும் 20 நாட்கள் நாடுமுழுவதும் இந்த திரைப்படம் ஓடாது என்பதாலும், 27 நாட்களாக ஓடியும், ஜவான் வசூலை முந்த முடியாததாலும், ஜவானிடம் தோற்றதாக கருதப்படுகிறது.
அதே போல் உலகம் முழுவதும் ஜவான் 1160 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் கல்கி உலகம் தற்போது வரை 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது. உலக அளவில் ஜவான் வசூலை முந்த 160 கோடி ரூபாய் இன்னும் வசூலிக்க வேண்டும். இதுவும் சாத்தியமில்லை என்பதால், உலக அளவிலும் ஜவானிடம் தோற்றதாக கருதப்படுகிறது.
எனினும் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில் கல்கி அதிக வசூலை குவித்த படமாக பார்க்கப்படுகிறது. ‘Deadpool மற்றும் Wolverine’ ஆகிய ஹாலிவுட் படங்களின் வருகை கல்கி வசூலை பாதித்துள்ளன.
====