உலகம்

காருக்கு பெயர் சூட்டும் போட்டி – 2 லட்சம் பேரை வீழ்த்தி காரை தட்டிச் சென்ற குர்ஆன் ஆசிரியர்!

SKODA நிறுவனத்தின் புதிய மாடல் KYLAQ
பெயர் சூட்டியவருக்கு கார் பரிசு
2 லட்சம் பேரை வென்ற குர்ஆன் ஆசிரியர்

கேரள மாநிலம் காசர்கோட்டில் குர்ஆன் ஆசிரியராக இருக்கும் முகமது சியாத் என்பவருக்குத் தான் இந்த நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல ஜெர்மனி கார் நிறுவனமான ஸ்கோடா, தனது புதிய மாடல் எஸ்யூவி காருக்கு, பெயர் ஒன்றை தேர்வு செய்யும் போட்டியை அறிவித்தது. பெயரானது K வில் ஆரம்பித்து Q வில் முடிய வேண்டும். இந்த போட்டியில் 2 லட்சம் போட்டியாளர்கள் கலந்து கொண்டு, பெயர்களை அனுப்பி வைத்தனர்.

இதில் Kwiq, Kylaq, Kosmiq, Kliq மற்றும் Kayaq 5 பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. அதில் வெற்றியாளராக Kylaq என்ற பெயரை தேர்வு செய்த முகமது ஷியாத் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். Kylaq என்றால் சமஸ்கிருத மொழியில் பளிங்கு என்று பொருள்.

முகமது ஷியாத் வெற்றி பெற்றதை தெரிவிக்கும் வகையில், ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, பேசிய போது, அவர் முதலில் இதனை நம்பவில்லை.
இதனால் ஸ்கோடா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இண்ஸ்டகிராம் பக்கத்தை பார்க்குமாறு கூறியுள்ளனர். அதற்கு பிறகு தான், உண்மையாகவே தான் வெற்றியடைந்திருப்பதை முகமது ஷியாத் உறுதிபடுத்திக் கொண்டார்.

தனக்கு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், ஆனால் தனது சம்பளத்தை வைத்து, அதனை வாங்க முடியாது என்பதால், அந்த ஆசையை தனக்குள் வைத்துக் கொண்டதாகவும் முகமது ஷியாத் தெரிவித்துள்ளார். தன்னால் இந்த வெற்றியை நம்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

புதிய மாடல் ஸ்கோடா காரின் விலை சுமார் 15 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என தெரிகிறது.


===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button