இந்த பெண்ணுக்கு வயது 60 என்றால் நம்ப முடிகிறதா? உலக அழகி பட்டத்தை வென்றார்!

20 வயது பெண்ணை போல் தோற்றமளிக்கும் 60 வயதுப் பெண்…உலக அழகி பட்டத்தை வென்று சாதனை…30 வயதை கடந்து, 2 பிள்ளைகளை பெற்று விட்டாலே, மூதாட்டியாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொள்ளும் இன்றைய பெண்கள் மத்தியில், 60 வயதில் ஒரு பெண் உலக அழகி பட்டத்தை வென்று சாதித்துக் காட்டியுள்ளார்.
அர்ஜெண்டினாவின் லா பிளாட்டாவைச் சேர்ந்தவர் அலிஜென்ட்ரா மலிசா ரோட்ரிகுஸ்.
இவருக்கு வயது 60. வழக்கறிஞர் மற்றும் பத்திரிக்கையாளர் ஆவார்.இவர் பியூனஸ் அயர்ஸ்சில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 30 பேரழிகள் வந்துள்ளனர். இதில் 18 வயது பெண்கள் கூட அடக்கம்.
ஆனால் இந்த போட்டியில் முதன்முறையாக வயது தடை இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 60 வயதான எலிசாவும் கலந்து கொண்டார்.
இந்தப் போட்டியில் நடுவர்களின் மனதை வென்று, எலிசா வெற்றி பெற்றுள்ளார்.இவர் தனது உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகள் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அதில் வாரத்திற்கு 3 முறை உடற்பயிற்சி செய்வதாகவும், தனது உடற்பயிற்சியில் அதிகம் இடம் பெறுவது வாங்கிங் மற்றும் ஜாக்கிங் எனத் தெரிவித்துள்ளார்.பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் விரும்பி உண்பதாகவும், தரமான கிரீம்களை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இது எல்லாவற்றையும் விட மேலாக, மதங்களில் வலியுறுத்தப்படும் உண்ணா நோன்பு பழக்கத்தை கடைபிடிக்கதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் தனது மூதாதையர்களிடம் இருந்து தனக்கு கடத்தப்பட்ட, மரபணுக்களும், தனது இளமையான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணம் எனக் கூறியுள்ளார்.