வைரல்

சச்சினுடன் சேர்ந்து ஜாலியாக வடபாவ் சாப்பிட்ட பில்கேட்ஸ் – வைரல் வீடியோ….!

மைக்ரோசாப் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில்கேட்ஸை இந்திய ஸ்ட்ரீட் ஃபுட்களின் காதலர் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் இந்தியா வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு உணவை ருசி பார்த்துவிடுவார். கடந்த ஆண்டு அவர் இந்தியா வந்த போது டோலி சாய்வாலா என்ற இன்ஸ்டாகிராம் பிரபலத்திடம் டீ வாங்கி குடித்த வீடியோ தாறுமாறு வைரலானது. இதனையடுத்து தள்ளுவண்டியில் தேநீர் விற்று வந்த டோலி சாய்வாலா நேஷனலில் இருந்து இன்டர்நேஷனல் பிரபலமாக மாறி கலக்கி வருகிறார்.

Microsoft founder Bill Gates shares Vada Pav snack break with with Sachin Tendulkar, says 'before we ...' - The Times of India

தற்போது இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்களை சந்தித்தார். அத்துடன் தனது நண்பரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கரையும் சந்தித்துள்ளார். நண்பர்கள் இருவரும் ஹாயாக பெஞ்சி ஒன்றில் அமர்ந்து மும்பையின் ஃபேமஸான ஸ்ட்ரீட் ஃபுட்டான வடபாவை ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பில்கேட்ஸ், “வேலைக்கு முன்னாடி ஒரு ஸ்நாக்ஸ் பிரேக்” என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் ஸ்ட்ரீட் ஃபுட் காதலர் பில்கேட்ஸுக்கு சச்சினுடன் சேர்ந்து செம்ம விருந்து போல என பதிவிட்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button