சினிமா

30 கோடி போட்டு, 130 கோடி அள்ளிய பகத் – நஸ்ரியா தம்பதி!

பட்டையை கிளப்பும் பகத் பாசிலின் ஆவேசம்…
30 கோடி போட்டு, 130 கோடி அள்ளிய நஸ்ரியா…
வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு…

அண்மையில் வெளியான பகத் பாசிலின் ஆவேஷம் திரைப்படம் 21 நாளில் 135 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 30 கோடி ரூபாய். பகத் பாசில், அவரது மனைவி நஸ்ரியாவின் தயாரிப்பு நிறுவனமும், மற்றொரு உதவி தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

இதனால் நடிகருக்கான சம்பளம் ஒரு பக்கம், தயாரிப்பாளருக்கான லாபம் மறுபக்கம் என கோடிகளை குவித்துள்ளனர் பகத் – நஸ்ரியா தம்பதி.

Aavesham' Box Office Collection Day 12: Fahadh Fassil's hit Malayalam film continues its impressive runசினிமாவில் நடித்து சில கோடிகளை சம்பளமாக பெற்று வந்த நஸ்ரியா, தற்போது, கணவருடன் சேர்ந்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து, அதை விட அதிக பணத்தை சம்பாதித்துள்ளார்.

அண்மைக்காலமாக மலையாள படங்கள் அதிக வசூலை குவித்து வருகின்றன.

அண்மையில் வெளியான பிருத்விராஜின் ஆடு ஜீவிதம், 82 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, அதை விட இரண்டு மடங்கு அதாவது, 160 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

முன்னதாக 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட மஜ்ஜுமல் பாய்ஸ் படம் 236 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.
இதே போல் வெறும் 3 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட பிரேமலு திரைப்படம் 136 கோடி ரூபாயை ஈட்டி, உலகச் சாதனை படைத்தது.

ஒரு காலத்தில் இந்திய திரையுலகில் தனித்துவம் பெற்று வந்த தமிழ் படங்கள் இப்போது, சில நடிகர்கள் மட்டும், இயக்குநர்களை நம்பி, தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
===========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button