இந்தியாவைரல்

மனைவியின் முதுகை விளம்பர போர்டாக மாற்றிய அட்லி! வீடியோ வைரல்!

இயக்குநர் அட்லியின் மனைவி முதுகில் அனந்த் அம்பானி பெயர்…
புகைப்படக் கலைஞர்கள் முன்பு முதுகை திருப்பிக் காட்டிய வீடியோ வைரல்…

ஆனந்த் அம்பானி கல்யாணத்துக்கு வந்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய பங்கிற்கு ஏதாவது கோமாளித்தனம் செய்து, பேசு பொருளாக மாற வேண்டும் என நினைத்தனர். அந்த வரிசையில் இயக்குநர் அட்லியும், அவரது பிரியாவும் செய்த செயல் உண்மையிலேயே ஊடகங்களின் கவனத்தை பெற்றது.

பேபி பிங்க் மற்றும் கோல்டு கலர் உடையில் அட்லி ஜோடி அங்கு வந்தனர். அட்லி மனைவி பிரியா, லெஹங்காவும், அட்லி ஷெர்வானியும் அணிந்திருந்தனர். அப்போது அவர்களை புகைப்படம் எடுத்த பாப்பரசி புகைப்பட கலைஞர்கள், அட்லியின் மனைவி பிரியாவின் லெஹங்காவின் பின்புறம் ஏதோ எழுதப்பட்டிருப்பதை கவனித்தனர்.

உடனடியாக பின்னால் திரும்ப முடியுமா என கேட்க, அட்லி தனது மனைவியின் முதுகை திருப்பிக் காட்டினார். அதில் ஆனந்த் பிரிகேட், அதாவது ஆனந்தின் ராணுவம் என எழுதப்பட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால் ஓவியா ஆர்மியைப் போல், ஆனந்த் ஆர்மி என வைத்துக் கொள்ளலாம்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அட்லியை கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர்.
தமிழ்திரையுலகில் இருந்து, பாலிவுட்டில் கால் பதித்த அட்லியின் ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதையடுத்து, அவர் பாலிவுட்டின் முன்னணி இயக்குநராக உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button