ஆம்ஸ்ட்ராங் வழக்கு! இயக்குநர் நெல்சன் வீட்டில் தங்கிய குற்றவாளி!

நாட்டையே உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதிய பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர்கள் சம்மோ செந்தில் மற்றும் சீசீங் ராஜா ஆகியோர் ஆவர். இவர்களுடன் வழக்கு தொடர்பாக பேசியவர்களின் பட்டியலை போலீசார் தயாரித்தனர்.அப்போது, வழக்கறிஞர் சிவா மற்றும் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் தேடிய நிலையில், சிவா சிக்கியுள்ளார்.
ஆனால் வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் தப்பி ஓடியுள்ளார். அவர் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மொட்டை கிருஷ்ணனின் நடமாட்டம் குறித்து போலீசார் விசாரித்த போது, திடுக்கிடும் செய்தி கிடைத்துள்ளது. மொட்டை சிவா, இந்தச் கொலைச் சம்பவம் அரங்கேறுவதற்கு முன்பு, பிரபல இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் மனைவி மோனிஷாவுடன் அடிக்கடி தொலைப்பேசியில் பேசியுள்ளார்.
மேலும் மொட்டை கிருஷ்ணன் நெல்சன் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, நெல்சனின் மனைவி மோனிஷாவும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தான் ஒரு வழக்கறிஞர் என்பதால், வழக்கு குறித்து மொட்டை கிருஷ்ணனிடம் பேசிவந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இயக்குநர் நெல்சனிடமும் விசாரணை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டத்தை தாண்டி தற்போது, சினிமா வட்டாரத்திற்குள் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.