உலகம்

அமெரிக்க நகரத்தை விற்கத் தயாரா? விலைக்கு கேட்கும் டென்மார்க்!

காசா வேண்டும், பனானா கால்வாய் வேண்டும், கனடா வேண்டும், கிரீன்லாந்து வேண்டும் என உலகின் பல நாடுகளை ஆக்கிரமிக்க விரும்பும் டிரம்புக்கு அவர் பாணியிலேயே டென்மார்க்கை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.சுமார் 2 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ள ஆவணத்தில்,

காலனியாக இருந்த கிரீன்லாந்தை, அமெரிக்கா வாங்க உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கிரீன்லாந்து மிகப்பெரிய நிலப்பகுதி. ஆனால் அங்கு மனிதர்கள் வசிக்க முடியாது. வெறும் 57 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர். இந்த நிலையில், அந்த நிலத்தை கைப்பற்ற டிரம்ப் முயன்று வருகிறார்.


இதனையொட்டி, டென்மார்க்கை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது, டென்மார்க்கிற்கு சூரிய குளியல் போடுவதற்கு கடற்கரை தேவை, பாம் மரங்களை கொண்ட அழகிய பகுதிகள் தேவை, ரோலர் ஸ்கேட்ஸ் பயிற்சி செய்ய இடம் தேவை. இவை எல்லாவற்றையும் கொண்ட பகுதி அமெரிக்காவின் கலிபோர்னியா. எனவே அதனை டிரம்ப் விலைக்கு கொடுத்தால் வாங்கத் தயார் எனத் தெரிவித்து, ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உலக நாடுகளை ஆக்கிரமிக்க முயலும் டிரம்பின் முயற்சி ஆபத்தானது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button