பிரபல நடிகையின் குளியலறை வீடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள்!? தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு?

எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கும் அண்ணாச்சி பட நடிகை ஊர்வசி ரவ்த்தாலா…
குளியலறை காட்சிகளை வெளியிட்ட பிரபல ஊடகம்…
நடிகையின் தொலைப்பேசி உரையாடலும் ஒட்டுக்கேட்பு என புகார்…
சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் நடித்த தி லெஜன்ட் படத்தில் ஹீரேயினாக நடித்தவர் ஊர்வசி ரவ்த்தாலா.
பிரபல நடிகையான இவர் குளியலறையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. பிரபல ஒப்பந்த புகைப்பட நிறுவனமான பாப்பரசி நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கங்களிலும் இது வெளியானது.
அந்த வீடியோவில் கழுத்தில் தாலியுடன் அவர் இருக்கிறார். இதனால், இந்த வீடியோ விளம்பர நோக்கத்திற்காக அவரே எடுத்து வெளியிட்ட வீடியோவா என்ற சர்ச்சை எழுந்தது. எனினும் கடந்த வாரம் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், விபத்தில் சிக்கி எழும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சூழ்நிலையில், அவர் அதில் இருந்து மீண்டு வந்து விட்டாரா எனத் தெரியவில்லை. இந்தச் சூழலில் இந்த வீடியோ வெளியான நிலையில், அவர் இது குறித்து தனது மேலாளரிடம் கேட்கும் ஆடியோ ஒன்றும் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், எப்படி இந்த வீடியோ வெளியானது, என அவர் கண்டிக்கும் பேச்சு இடம்பெற்றுள்ளது.
தற்போது, அந்த ஆடியோவும் வெளியாகியுள்ளதால், அவரது தொலைப்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக இவையெல்லாம் செய்யப்படுகின்றதா, அல்லது அந்த நடிகை பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளாரா போன்ற பல கேள்விகளை அவரது ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
====