சினிமா

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த நிகழ்ச்சி யார் இந்த லேடி காகா? எப்படி இத்தனை லட்சம் ரசிகர்கள்!

எந்த ஒரு பெண் இசைக்கலைஞருக்கும் கிடைக்காத மாஸ் வரவேற்பையும், சாதனையும் இந்த ஒரே ஒரு நிகழ்ச்சி மூலமாக லேடி காகா தட்டித்தூக்கியுள்ளார்

அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் லேடி காகா தான் இன்றைய உலகத்தின் விவாதப் பொருள்…
என்னது லேடி காகா வா… அண்டக் காக்கா கேள்விப் பட்டிருக்கிறோம்.

அது என்ன லேடி காக்கானு நீங்கள் கேட்கலாம்.அதபற்றித் தான் இந்த வீடியோவில் பார்க்க உள்ளோம்.

அமெரிக்க இசைக்கலைஞரான லேடி காக்கா ரியோ டி ஜெனிரோ நகரத்தில நடத்தியுள்ள இசைக்கச்சேரி, இசை வரலாற்றில் மைல் கல் சாதனை படைத்துள்ளது.
எந்த ஒரு பெண் இசைக்கலைஞருக்கும் கிடைக்காத மாஸ் வரவேற்பையும், சாதனையும் இந்த ஒரே ஒரு நிகழ்ச்சி மூலமாக லேடி காகா தட்டித்தூக்கியுள்ளார்.

திறந்த கடற்கரையையே மேடையாக்கி, எல்இடி திரையில், ஐ லெவல் சவுண்ட் சிஸ்டம் அதிர பாப் ஐகான் லேடி காகா செய்த இசைக்கச்சேரியை 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று ரசிகர்கள் வைப் செய்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?.

வரலாற்றில் எந்த பெண் இசைக்கலைஞருக்கும் கிடைக்காத வகையில் லேடி காகாவின் இந்த ஓபன் பாப் ஷோவை கண்டு ரசிக்க 25 லட்சம் மக்கள் கூடியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2024 ஆம் ஆண்டு மடோனாவின் கச்சேரியை ரசித்த 16 லட்சம் பார்வையாளர்களின் சாதனையை லேடி காகா முறியடித்துள்ளார்.

லேடி காகா பாப் இசை உலகில் முன்னணி இசைக்கலைஞராக வலம் வருகிறார். 2025 ஆம் ஆண்டில் லேடி காகாவின் நிகர மதிப்பு சுமார் 3000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மியூசிக் ஆடியோ சேல்ஸ், ஸ்ட்ரீமிங் ராயல்டிஸ், மியூசிக் ஷோ’ஸ், ஆக்டிங், பிராண்டிங் மற்றும் பிசினஸ் இன் வெஸ்ட்மெண்ட் மூலமாக இந்த தொகையை சம்பாதித்துள்ளார்.

இதில் மாலிபுவில் $22.5 மில்லியன் மதிப்புள்ள சொகுசு பங்களா, மேக்கப் பிராண்டான Haus Labs-யில் அவர் செய்துள்ள முதலீடு, டிஜிட்டல் மீடியா இன்கம் ஆகியவையும் அடக்கம்.

2025 ஆம் ஆண்டில், லேடி காகா 40 மில்லியன் டாலர் முதல் 60 மில்லியன் டாலர் வரை சம்பாதிப்பார் என கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பாப் இசைக்கச்சேரியில் பங்கேற்க லேடி காகா 1.5 மில்லியன் முதல் 3 மில்லியன் வரை சம்பளமாக பெறுகிறாராம்.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button