அம்பானி கல்யாணத்துக்காக அரைகுறை ஆடையுடன் வந்து இறங்கிய அமெரிக்க பிரபலம் கிம் கர்டஷியன்….

அம்பானி கல்யாணத்துக்காக அரைகுறை ஆடையுடன் வந்து இறங்கிய அமெரிக்க பிரபலம் கிம் கர்டஷியன்….
உலக பிரபலங்களை பார்க்க முண்டியடித்த மும்பைவாசிகள்…
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமணம் ஒரு வழியாக ஜுலை 12 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, ஜியோ உலக மையத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல உலகப் பிரபலங்கள் வந்து குவிந்தனர்.
இந்நிலையில், இண்ஸ்டகிராம் தளத்தில் மட்டும் 36 கோடி பாலோயர்களை வைத்துள்ள அமெரிக்க டிவி நடிகை கிம் கர்டஷியான் மற்றும் அவரது சகோதரி க்ளோஸ் கர்டஷியான் ஆகியோர் அவர்களது வழக்கமான அரைகுறை ஆடையில் வந்தனர்.
விமான நிலையத்தில் அவர்களை பார்ப்பதற்கும், போட்டோ எடுப்பதற்கும் கூட்டம் குவிந்தது. ஏற்கனவே அங்கு தயார் நிலையில் இருந்த பாப்பரசி எனப்படும் ஒப்பந்த புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுக்க முண்டியடித்தனர்.
கர்டஷியான் சகோதரிகளில் மூத்தவர் கிம் கர்டஷியான். இவர் அமெரிக்காவில் மிகவும் பிரபலம் ஆனவர்.
இவரது சொத்து மதிப்பு சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இவரது ஒரு நாள் வருமானம் மட்டும் 6 கோடி ரூபாய்க்கு அதிகம். இண்ஸ்ட்கிராமில் ஒரு விளம்பர பதிவையிட இவர் இந்திய மதிப்பில் 14 கோடி ரூபாய் வசூலிக்கிறார். இண்ஸ்ட்கிராம் பக்கத்தில் இவரை 36 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.
இந்தியாவில் அதிக பாலோயர்களை கொண்ட விராட் கோலியை 27 லட்சம் பேர் மட்டுமே பின் தொடர்கின்றனர். பிரதமர் மோடியை 9 கோடி பேர் மட்டுமே பின்தொடர்கின்றனர்.
இதில் இருந்த கார்டிஷியனின் மவுசை தெரிந்து கொள்ளலாம். பல திருமணங்களை முடித்த கார்டிசியன், கடைசியாக 83 கோடி ரூபாய் செலவு செய்து, கிரிஷ் என்பவரை திருமணம் செய்தார். அந்த திருமணமும் 72 நாட்கள் மட்டுமே நீடித்தது.
42 வயதான இவர் 4 குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். இருப்பினும், அமெரிக்க பொழுது போக்குச் சந்தையில் இவர் புகழ் மங்கவில்லை.
=====