ஏமனின் 100 ரூபாய் ஆயுதத்தை வீழ்த்த லட்சம் ரூபாய் செலவு செய்யும் அமெரிக்கா – செங்கடல் போரில் படுதோல்வியை சந்தித்து வரும் உலக வல்லரசு
ஏமன் படைகளின் குறைந்த விலை ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படை தினமும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கிறது

செங்கடல் போரில் அன்சர் அல்லா இயக்கம் தலைமையிலான ஏமன் ஹவுத்திப் படைகளிடம் அமெரிக்க எப்படி தோல்வியை சந்தித்து வருகிறது, அதனை எப்படி நாசுக்காக மறைக்கிறது என்ற விபரத்தை லெபனானின் அல் மயாதீன் ஊடகம் கட்டுரையாக வெளியிட்டுள்ளது, அதனை பார்க்கலாம்.
60 மில்லியன் டாலர் ஜெட் விமான இழப்பு போன்ற அமெரிக்காவின் தோல்விகள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ஏனெனில் ஏமன் அன்சார் அல்லா இயக்கத்தின் எதிர்தாக்குதல் அமெரிக்காவின் பில்லியன் டாலர் இராணுவ முயற்சிகளை விட அதிகமாக உள்ளது.
அன்சர் அல்லாவின் செங்கடல் முற்றுகையை முடிவுக்கு கொண்டு வர ஏப்ரல் 28 ஆம் தேதி, டிரம்ப் நிர்வாகத்தால் USS ஹாரி எஸ். ட்ரூமன் செங்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் ஏமன் படை அனுப்பிய ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்ப முயன்ற போது, ஒரு F/A-18E போர் விமானம் மற்றும் இழுவை டிராக்டர் கடலில் விழுந்து மூழ்கியது.
இந்த சம்பவம் குறித்த அமெரிக்க கடற்படை செய்திக்குறிப்பில் அன்சார் அல்லாவின் தாக்குதல் பற்றி எந்த தகவலும் இல்லை என்றாலும், பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் பல முக்கிய பத்திரிகையாளர்களுக்கு இந்த இழப்புகள் ஏமனின் செயல் என்று விளக்கியுள்ளனர்.
விமானம் தாங்கி கப்பலில் இருந்து 60 மில்லியன் டாலர் ஜெட் விமானம் மூழ்கியதாக CNN செய்தி வெளியிட்டது. இது USS Harry S. Truman மீது அன்சார் அல்லா நடத்திய “ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலின்” விளைவாக ஏற்பட்டதாக CNN வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2024 செப்டம்பரில் செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதில் இருந்து தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருவதாக CNN மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில், USS Harry S. Truman இல் நிறுத்தப்பட்டிருந்த ஒரு அமெரிக்க போர் விமானம், செங்கடலில் எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொண்டபோது தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது. விமானம் தாங்கிக் கப்பலை அழைத்துச் சென்ற USS Gettysburg, தெளிவற்ற காரணங்களுக்காக ஜெட் விமானத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தியது.
பின்னர், இந்த ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி, சூயஸ் கால்வாயின் வடக்கு முனையில், எகிப்தின் போர்ட் சைட் அருகே ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் USS Harry S. Truman பெருமளவில் சேதமடைந்தது.
பழுதுபார்ப்பதற்காக கிரேக்கத்தின் சவுடா விரிகுடாவில் சென்று பின்னர் மீண்டும் சேவைக்குத் திரும்பியது. இந்த பழுதுபார்ப்புகளுக்கான செலவு USS ஹாரி எஸ். ட்ரூமன் ஏற்படுத்திய மொத்த சேதம் குறித்த விவரங்களை வெளியிட அமெரிக்க கடற்படை மறுத்துவிட்டது.
ஏமன் படைகளின் குறைந்த விலை ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படை தினமும் மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழிக்கிறது.
ஏமன் படைகளை தோற்கடிக்க ஆரம்பிக்கப்பட்ட ஆபரேஷன் ப்ராஸ்பெரிட்டி கார்டியனும் தோல்வியடைந்தது. அமெரிக்கா ஏமன் மீது போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் கிட்டத்தட்ட 60 ஏவுகணைகள், 420 வான் பரப்பு ஆயுதங்கள் என மொத்தம் 770 தாக்குதல்களை ஒன்பது மாதமாக ஏமன் மீது அமெரிக்கா நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் 4 ஆம் தேதி பெயர் குறிப்பிடாத பென்டகன் அதிகாரிகள் டிரம்பின் போர்க்குணம் அன்சார் அல்லாவை கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், இன்றுவரை 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு பல நடவடிக்கைகளை எடுத்தும் ஏமனை வீழ்த்த முடியாதது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய அவமானமாக இருந்து வருகிறது.
====