அம்பானி வீட்டு பணக்கார நாய் – ரூ. 3 கோடியில் மெர்சிடஸ் பென்ஸ் கார்!

நாய்க்கு ரூ. 3 கோடியில் பென்ஸ் கார்…
ஆடம்பத்தின் உச்சத்திற்கே சென்ற அம்பானி குடும்பம்…
ஆனந்த் அம்பானி திருமணத்தில் ஒரு நாய், அங்கும் இங்கும் உலாவிக் கொண்டிருப்பதை பலரும் பார்த்திருப்போம். அந்த நாய் கூட சாதாரண நாய் அல்ல எனத் தெரியவந்துள்ளது. “ஹேப்பி” அதாவது “மகிழ்ச்சி” என பெயரிடப்பட்ட அந்த பணக்கார நாய்க்கு அம்பானி குடும்பம் “மெர்சிடஸ் பென்ஸ்” காரை வழங்கி இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் கார்களில் “G 400 D” என்ற மாடல் கார் தான் அம்பானி வீட்டு நாய் பயணம் செய்ய கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் காரின் விலை 3 கோடி ரூபாய்.
இந்த காரில் தான் அந்த நாய் பவனி வருகிறது. அந்த நாய் golden retriever வகையைச் சேர்ந்தது. திருமணத்தன்று அந்த நாயும் இளஞ்சிவப்பு பனாரஸ் வெள்ளிப் பட்டு உடை அணிந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பணக்காரர்களின் செல்லக் பிராணிகளுக்கு உடைகளை தைத்துக் கொடுக்கும் Pankh Designer Pet Wear என்ற பிரபல நிறுவனம் சார்பில் நாய்க்கு உடைகள் தயாரிக்கப்பட்டது.