படிப்பு, திறமை, அறிவு எல்லாம் இருந்தும், கவனிக்கப்படாத அம்பானி குடும்ப வாரிசு!

படிப்பு, திறமை, அறிவு எல்லாம் இருந்தும், கவனிக்கப்படாத அம்பானி குடும்ப வாரிசு!
ஆனந்த் அம்பானிக்கு நிகராக பணம் இல்லாததால் புறக்கணிக்கப்பட்ட ஜெய் அன்மோல் அம்பானி… யார் இவர்?
முகேஸ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் இவ்வளவு தடல்புடலாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற அதே அம்பானி குடும்ப திருமணம் பற்றி அதிகம் யாருக்கும் தெரியவில்லை.
அது தான் ஜெய் அன்மோல் அம்பானி திருமணம். முகேஷ் அம்பானியின் சகோதரர் மகன் அனில் அம்பானியின் மகன் தான் ஜெய் அன்மோல்.
படிப்பு, அறிவு, அழகு, திறமை என அனைத்தும் ஒருங்கே பெற்றவர்.
18 வயதிலேயே ரிலையன்ஸ் மியூச்சுவல் பன்ட் நிறுவனத்தில் இன்டன்ஷிப்பில் சேர்ந்தார்.
2014 ஆம் ஆண்டு பிறகு அந்த நிறுவனத்தில் நிரந்தரமாக இணைந்து, உயர் பதவிகளை பிடித்தார்.
2017ஆம் ஆண்டு ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
2018ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் நிப்பான், ரிலையன்ஸ் ஹோம் நிறுவனங்களில் இணைந்து, தனது திறமையால், தனது பங்குகளை 40 சதவீதம் வளர்த்துக் கொண்டார். இதன் மதிப்பு 2000 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது.
தனி ஜெட் விமானம் வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. இவை எல்லாம் இருந்தும், தனது பெரியப்பா மகன் ஆனந்த் அம்பானிக்கு இணையான சொத்துக்கள் இவரிடம் இல்லை. ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு 3.3 லட்சம் கோடி ரூபாய். இந்த சொத்துக்கள் அவரது தந்தை மூலம் அவருக்கு கிடைத்தது தான்.
அனில் திருபாய் அம்பானி தான் ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அவரது மூத்த மகன் முகேஷ் அம்பானியை விட, இளைய மகன் அனில் அம்பானி தான் ஆரம்பத்தில் வெளி உலகத்திற்கு நன்கு அறியப்பட்டவர். அரசியல் தலைவர்கள், வர்த்தக உலகம், நடிகர் நடிகைகள், ஊடகங்கள் என அனைத்து தரப்பிடமும் நல்ல தொடர்புகளை வைத்திருந்தார்.
ஆனால் நேரம் அவருக்கு கை கூடவில்லை. சகோதரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் பிரிந்த நிலையில், அனில் அம்பானி, தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் இழந்தார். அதே நேரம் முகேஷ் அம்பானி வளர்ந்தார்.
இதுவே அனில் அம்பானியின் குடும்பம் ஊடக வெளிச்சத்தில் இருந்து மறைந்து போக காரணமாக அமைந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானி – கிரிஷா ஷா திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆனால், ஆனந்த் அம்பானியின் திருமணம் போல், அநாவசிய பிரமாண்டம் இல்லை. இதனால் இந்த திருமணம் பேசுபொருளாக மாறவில்லை.
கீழே இருப்பவர் மேலே வருவதும், மேலே இருப்பவர் கீழே வருவதும் அரசியல், சினிமா, வியாபாராத்தில் இயல்பான ஒன்று.
======