சினிமாதமிழ்நாடு

பாஜகவின் ஒட்டுமொத்த ஆதரவை பெற்ற அமரன்!

அமரன் சிறந்த தேசபக்தி படம் என எச்.ராஜா புகழாரம்…
பள்ளிக் கூடங்களில் திரையிட வேண்டும் என வானதி வலியுறுத்தல்…
கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அண்ணாமலை…

அமரன் திரைப்படத்தை பாஜ.க, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அமரன் திரைப்படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். இந்த படத்தை பார்த்த எச். ராஜா, இது ஒரு சிறந்த தேசபக்தி படம் என கூறியுள்ளார். இதே போன்று இந்த படத்தை பார்த்து, நீண்ட பாராட்டை பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்திருக்கிறார். கமல்ஹாசனையும் அவர் பாராட்டியுள்ளார். கமல் ஹாசனும் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதே நேரம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த, ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படமான அமரனில், சில சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்துள்ளதாக எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ, தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

குறிப்பாக காஷ்மீர் மக்களை தீவிரவாதிகளுக்கு ஆதரவானர்கள் என்பதைத் போல, காட்டியுள்ளதாகவும், ஆசாதி முழக்கத்தை தீவிரவாத ஆதரவு முழக்கமாக காட்டியுள்ளது, அரை விதவைகள் என்ற, கணவனை இழந்த பெண்களை, தீவிரவாதிகளின் மனைவிகள் என காட்டுவது போன்ற பல காட்சிகள் எதிர்ப்பை சந்தித்துள்ளன. அதே நேரம் இந்த திரைப்படத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் ஆதரித்துள்ளன. சீமானும் ஆதரித்துள்ளார்.
=========

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button