சினிமா

KGF 3 ஆம் பாகத்தில் நடிக்க உள்ள அஜித்! ரசிகர்கள் உற்சாகம்!

KGF இயக்குநரை நேரில் சந்தித்த நடிகர் அஜித்…
2 படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை…
விரைவில் கையெழுத்தாகும் ஒப்பந்தம்…

இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் KGF தொடர். இந்நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குநர் Prashanth Neel நடிகர் அஜித்தை அண்மையில் சந்தித்துள்ளார். இதனையடுத்து, Prashanth Neel இயக்கத்தில் 2 படங்களில் அஜித் நடிக்க விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முதல் படம் தனி கதையம்சம் கொண்ட ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2வது படம் KGF 3 என கூறப்பட்டுள்ளது. இந்த 2 திரைப்படங்களையும் பெரிய மற்றும் வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் Vijay Kiragandur வின் Hombale Films நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனித் ராஜ்குமாரின் திரைப்படங்கள் தொடங்கி, KGF தொடர்கள், காந்தாரா உள்ளிட்ட வெற்றிப் படங்கள், Hombale Films நிறுவனத்தின் தயாரிப்புகள் ஆகும். மகிழ் திருமேனியின் விடாமுயற்சி படப்பிடிப்பில் உள்ள நடிகர் அஜித், ஓய்வின் போது, இயக்குநர் Prashanth Neelஐ சந்தித்துள்ளார்.

AK64 அதாவது அஜித்தின் 64வது படமாக Prashanth Neel இயக்கத்தில் உருவாக உள்ள படம் தனி கதையம்சத்தை கொண்டதாக இருக்கும் என்றும், இந்த படத்திற்கு 2025ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கி, 2026ஆம் ஆண்டு திரைக்கு வரும் என யூகிக்கப்பட்டுள்ளது.

AK65 அல்லது AK66 திரைப்படமாக KGF 3 இருக்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்புகள் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித் உடன் யாஷ்ஷும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பில், யார் முந்தப் போகிறார்கள் என்பதே விசயம்.

தற்போது Prashanth Neel தற்போது Salaar: Part 2 – மற்றும் படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஜுனியர் என்டிஆரின் பெயரிடப்படாத படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படங்களின் முடிவுகளை பொறுத்தே, அஜித் குமாரின் படப் பணிகள் வேகமெடுக்கும் எனத் தெரிகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button