மஞ்சுமல் பாய்ஸை தோற்கடிக்கப்போகும் ஆடு ஜீவிதம் – விஜய் தேவரகொண்டாவை வீழ்த்திய பிருத்விராஜ்!

ஒரே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூலித்த புதிய சாதனை படைத்த ஆடு ஜீவிதம்…
மஞ்சுமல் பாய்ஸ் சாதனையை விரைவில் முறியடிக்கும் என எதிர்பார்ப்பு…
விஜய் தேவர கொண்டாவை வீழ்த்திய பிருத்விராஜ்…
விஜய் தேவரகொண்டாவை ஓரம் கட்டிய பிரித்விராஜ்
மலையாள சினிமாவின் பொற்காலமான ஓராண்டு: விஜய் தேவரகொண்டாவை ஓரம் கட்டிய பிரித்விராஜ் திரைப்படம்!
ஒருகாலத்தில் மோசமான சினிமா என்று புறக்கணிக்கப்பட்ட மலையாள சினிமா உலகம், தற்போது இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து வருகிறது. அதிலும் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் மோலிவுட் நிரூபித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் உலகளவில் ரூ.100 கோடியை மிக வேகமாக எட்டிய மலையாளப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு பென்யமின் என்பவரின் ஆடுஜீவிதம் என்ற மலையாள நாவலைத் தழுவி அதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடுஜீவிதம்.
இந்த திரைப்படம் வெளியான அதே வாரத்தில் பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவின் The Family Star திரைப்படமும், 1124 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட Godzilla x Kong: The New Empire திரைப்படமும் வெளியானது.
இதனால் ஆடுஜீவிதம் திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காது என்று கூறப்பட்ட நிலையில், கணிப்புகளை சுக்குநூறாக உடைத்து ஆடுஜீவிதம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
விஜய் தேவரகொண்டாவின் The Family Star திரைப்படம் 10 கோடி வசூலுக்கே திண்டாடி வரும் நிலையில், ஆடுஜீவிதம் திரைப்படம் உலகளவில் 100 கோடி வசூலை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.
கடந்த ஒரு வருட காலம் மலையாள சினிமாவின் பொற்காலம் என்றே சொல்லலாம். பிரம்மயுகம் திரைப்படம் சுமார் 60 கோடியும், பிரேமாலு திரைப்படம் சுமார் 135 கோடியும் வசூல் செய்தது. அதன் உச்சமாக தமிழ்நாட்டில் பெரும் ஹிட் அடித்த மஞ்சுமெல் பாய்ஸ் 223 கோடி வசூல் செய்து மலையாள திரைப்பட உலகையே அதிர வைத்தது.
தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் 128 கோடி ரூபாய் வசூலை எட்டி, அதிக வசூல் செய்த மலையாள திரைப்படமாக இருக்கும் நிலையில், ஆடு ஜீவிதம் ஒரே வாரத்தில் 100கோடி கடந்து, மஞ்சுமல் பாய்ஸை விரட்டிச் சென்று வருகிறது. விரைவில் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
===================