உலகம்

இஸ்லாத்தை தழுவிய யூ டியூபர் – தென் கொரியாவில் பள்ளிவாசல்

தென்கொரியாவின் பிரபல யூடியூபரும் K pop கலைஞருமான ஜே கிம் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிய நிலையில் தொடர்ந்து அங்கு புதிய பள்ளிவாசல்களை கட்டும் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
யூடியுபில் சுமார் 55 லட்சம் பாலோவேர்களை கொண்ட ஜே கிம் தனது பெயரையும் தாவுது கிம் என மாற்றிக்கொண்டார்.

மேலும் இஸ்லாம் தொடர்பான பரப்புரைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தென்கொரியாவில் முஸ்லிம்கள் தொழுவதற்கு அதிகமான பள்ளிகளை கட்ட விரும்புவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படியே தென்கொரியாவின் இன்சியோன் பகுதியில் பள்ளிவாசல் கட்ட உள்ளதாக அறிவித்திருந்தார்.

Islam answered all my questions: K-pop singer Daud Kim performs Umrahஅதற்கான இடமும் வாங்கியிருந்தார். இந்நிலையில் பள்ளிவாசல் கட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தி கொரியா ஹெரால்டு ஊடகம் தெரிவித்துள்ளது.
மசூதி உருவானால் இந்த பகுதியில் உள்ள தங்கள் சொத்துக்களின் மதிப்பு குறைந்துவிடும் என கருதுவதாக Yongjong குடியிருப்புவாசிகளுக்கான ஆன்லைன் மன்றத்தில் சிலர் முறையிட்டுள்ளனர்.

உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பால் அந்நிலத்தின் ஒப்பந்தத்தை நிறுத்துமாறு அந்நிலத்தின் முன்னாள் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளதாக தென்கொரிய ஊடகமான Yonhap NewsTV தெரிவித்துள்ளது.

உள்ளூர் எதிர்ப்பு மட்டுமின்றி அரசின் தரப்பிலிருந்தும் பல்வேறு தடைகளை சந்தித்து வருகிறார் தாவுத் கிம்.
வழிபாட்டுதலம் கட்டுவதற்கான முன்அனுமதி பெறவில்லை எனக்கூறி உள்ளூர் அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதேபோல் டைகு பகுதியில் மசூதி கட்ட விரும்பிய கிம்மின் முயற்சிகளும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவில் சுமார் 1.50 லட்சம் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் 1.20 லட்சம் பேர் உஸ்பெகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
================

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button