சினிமா

எந்த நடிகையும் இதுவரை வாங்காத சொகுசுக் கார்! சாதித்த ஊர்வசி ரவுத்தாலா!

சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருளுடன் லெஜன்ட் படத்தில் நடித்தவர் ஊர்வசி ரவுத்தாலா. பல படங்களில் நடித்திருந்தாலும், அண்மையில் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடித்திருந்த டாக்கு மகராஜ், 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.தனது நடிப்புக்காக அல்லாமல், வேறு சர்ச்சைக்களுக்காவே மீடியாவில் அதிகம் அறியப்பட்ட ஊர்வசி ரவுத்தாலா முதல் முறையாக ஒரு பாசிட்டிவ் விசயத்திற்காக மிகவும் பேசுபொருளாகியுள்ளார்.12 கோடி ரூபாய் மதிப்புள்ள Rolls Royce Cullinan மாடல் காரை வாங்கிய முதல் நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் ஊர்வசி ரவுத்தலா. 12 கோடி ரூபாய் அளவுக்கு இந்த காரில் அப்படி என்ன இருக்கிறது என்பதை பார்க்கலாம்.ரோல்ஸ் ராய்ஸ் பிராண்டின் முதல் எஸ்யூவி காராக கல்லினன் மாடல் உள்ளது. அதாவது, அனைத்து வீல்களும் இயங்கும். கல்லினன் என்பது விலை உயர்ந்த வகை வைரத்தை குறிக்கிறது.

இந்தக் காரின் இண்ட்டீரியர் மற்றும் எக்ஸ்ட்டீரியர் நிறம், பொருள், தரம், அளவு உள்ளிட்ட ஒவ்வொன்றையும், உரிமையாளருக்கு ஏற்றபடி வடிவமைத்துத் தருவார்கள்.OFF ROAD எனப்படும், சாலைகள் அற்ற, குண்டும் குழியுமான, மலைப்பகுதிகளிலும், ஓட்டுபவர்களுக்கும், அமர்ந்திருப்பவர்களுக்கும் சொகுசு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.லக்கேஜ் வைக்கும் பகுதிக்கும், பயணிப்பவர்கள் அமரும் பகுதிக்கும் இடையே கண்ணாடி தடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் இந்த வசதி, இந்த மாடலுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த V12 பெட்ரோல் எஞ்சின், காரின் வலிமையான உந்துதலை பறைசாற்றுகிறது.”மேஜிக் கார்பெட்” சவாரி வசதியை கொண்டுள்ளது. கரடுமுரடான நிலப்பரப்பிலும் கூட நம்பமுடியாத மென்மையான மற்றும் வசதியான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது.

ADVANCED சஸ்பென்ஷன் வசதி உள்ளது. அதாவது, அதிநவீன சுய-நிலை காற்று சஸ்பென்ஷன் அமைப்பு, இரட்டை விஷ்போன் முன் அச்சு மற்றும் ஐந்து-இணைப்பு பின்புற அச்சு ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் அதன் மென்மையான சவாரி மற்றும் கையாளுதல் சுறுசுறுப்புக்கு பங்களிக்கின்றன.நடிகர் அல்லு அர்ஜுன் மட்டுமே இந்த கல்லினன் மாடல் காரை வைத்துள்ளார்.நடிகர் விஜய், நடிகர் ரித்திக் ரோஷன், நடிகை பிரியங்கா சோப்ரா, உள்ளிட்டோர் ரோல்ஸ் ராய்சில் “கோஸ்ட்” மாடல் கார்களை வைத்துள்ளனர். இதன் விலை சுமாராக 8 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.நடிகர் ஷாருக்கான் அதை விட சற்று விலை குறைந்த Rolls-Royce Phantom Drophead Coupe காரை வைத்துள்ளார்.அதே நேரம் நடிகர்களிலேயே பெரும் பணக்காரர் சாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button