20 தோல்விகளுக்கு பிறகு ஒரு மாபெரும் வெற்றி, ரூ. 500 கோடி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவரின் கதை!

20 முறை தோல்வியடைந்தாலும் துவழாத இளைஞர்…ரூ. 500 மதிப்புள்ள வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கிச் சாதனை…Dry Fruits, Nuts, Health drinks பயன்படுத்துபவர்களுக்கு சற்று பரிட்சயமான பெயர் Happilo தயாரிப்புகள். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் தான் Vikas D Nahar. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், விவசாய குடும்பத்தில் பிறந்தவர்
.படித்து விட்டு, சில நிறுவனங்களில் வேலை செய்த இவர், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற தீராத ஆசையால், பல தொழில்களை அடுத்தடுத்து தொடங்கியுள்ளார். அனைத்திலும் நஷ்டம். தொடர்ந்து அடி மேல் அடி.
இன்று இல்லாவிட்டால் நாளை வெற்றிக் கிடைக்கும் என அடுத்தடுத்து கால் வைத்த இடமெல்லாம் கன்னிவெடி.
சுமார் 20 தொழில்களை தொடங்கி, அனைத்திலும் நஷ்டமடைந்து, குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரின் கோபத்திற்கும் ஆளாகியுள்ளார்.
இறுதியாக வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2 ஊழியர்களோடு Happilo என்ற பெயரில், Dry Fruits, Nuts, Health drinks ஆகிய தயாரிப்புகளை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.இந்த தொழில் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக கை கொடுக்கத் தொடங்கியது. அவருக்கு ஏற்பட்ட தோல்விகள், பாடமாக கண் முன் வந்து, முன்னர் செய்த எந்த தவறுகளையும் செய்யாமல், நேர்த்தியாக முன்னேறத் தொடங்கினார்.தற்போது, இவரது Happilo நிறுவனத்தின் மதிப்பு 500 கோடி ரூபாய்.
தோல்வி ஏற்படும் போது, துவண்டு விடுவது தீர்வல்ல. எழுந்து நிற்பது மட்டுமே ஒரே வழி என்பதை உலகத்திற்கு உணர்த்திக் காட்டியுள்ளார் Vikas D Nahar.தற்போது இவரது நிறுவனம் 60 வகையான வாசனை பொருட்கள், உலர் பழங்கள் மற்றும் 100 வகையான சாக்லெட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.