உலகம்

டிரம்ப் சுடப்பட்ட போட்டோவை வைத்து 2 மணி நேரத்தில் டீசர்ட் தயாரித்த சீன கம்பெனி – குவியும் ஆர்டர்!

டொனால்டு டிரம்ப் சுடப்பட்ட போட்டோவை வைத்து டீ சர்ட் தயாரித்த சீன கம்பெனி…
ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்து வருவதாக விளக்கம்…

உலக அளவில் உற்பத்தி என்றால் தற்போது முதலிடத்தில் இருப்பது சீனா தான். உலகின் எந்த மூலையில் ஒரு பொருள் தயாரிக்கப்பட்டாலும், அதைப் போலவே, அதை விட குறைவான விலையில், அந்த பொருளை தயாரித்து விடுவதில் சீன நிறுவனங்களுக்கு நிகர் யாரும் இல்லை. அதே நேரம் தரம் குறைவாகவே இருக்கும்.

இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சுடப்பட்ட 2 மணி நேரத்தில் அவர் காதில் ரத்தம் வடியும் புகைப்படத்தை பொறித்து, டீசர்ட்டை தயாரித்து வருகிறது ஒரு சீன நிறுவனம். இந்த டீ சர்ட்டை வாங்க ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும், அந்த நிறுவனம் கூறியுள்ளது.

“துப்பாக்கிச்சூடு என்னை வலிமைப்படுத்தியுள்ளது” என டிரம்ப் கூறிய வாசகங்களையும் சேர்ந்து, பொறித்து, அந்த டீசர்ட் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து Taobao ஆன்லைன் நிறுவன விற்பனையாளர், Li Jinwei கூறும் போது, நாங்கள் டீ சர்ட் பிரின்ட் வேலையை தொடங்குவதற்கு முன்பே அமெரிக்காவில் இருந்தும் சீனாவில் இருந்தும் 3000 ஆர்டர்கள் வந்து விட்டன எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி, சீன நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு, இரு கட்சியினருக்கும் தேவையான டீ சர்ட்களை தயாரித்து ஆன்லைனில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button